மான்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசியலையும் இலக்கியத்தையும் ஒரு
இலக்கிய மேடையில் எவ்வளவு அழகாக நெகிழ்வாக உச்சரிக்கிரார் என்பதை பார்த்து
நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். நீங்கள் தமிழகத்தில் பிறந்திருக்கக் கூடாதா?
தமிகதத்தில் அமைச்சராகியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமே என
சினிமா பாடல் இயற்றும் யுகபாரதி பேசியுள்ளார்.
வசந்தம் டீவி அறிப்பாளர் அட்டாளைச்சேனை அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது'
கவிதை நூல் வெளியீடு விழா ஞாயிற்றுக்கிழமை தபால் தலைமையக கேட்போர்
கூடத்தில் நடைபெற்றபோது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்தியாவில் இருந்து அஸ்கரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த
யுக பாராதி மேலும் பேசுகையில், மான்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ்
மொழியை மிக அழகாக பேசுகிறார்.என்னுடைய 10 வருட அனுபவத்தில் இப்படி தமிழ்
மொழியை பேசுகின்ற ஒருவரை பார்த்ததில்லை. எங்களுடைய தமிழக்கதில் இப்படி
தமிழ் பேசுகின்ற அமைச்சர்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. என்ற
ஒரு ஆதங்கம் எனக்கு இருக்கின்றனது.
தமிழகத்தில் எத்தனையோ அமைச்சர்கள் இருக்கிறார்கள் அவர்களை காண்பதில்
மிகவும் அறிதாக இருக்கின்றது. மான்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீமை போல்
இலக்கியத்தில் ஆர்வம் உள்ள அமைச்சரை எனது வாழ்நாளில் இன்றுதான்
பார்த்துள்ளேன்.


0 Comments