Subscribe Us

சோற்றுப் பார்சல்களின் விலை இன்றுமுதல் 10 ரூபாவால் அதிகரிப்பு.

அரிசி விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மையால் இன்று முதல் உண­வுப்­பொ­தி­யொன்றின் விலையை 10 ரூபா­வினால் அதி­க­ரிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக அகில இலங்கை சிற்­றுண்­டி­ச்சாலை உரி­மை­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் கருத்து தெரி­வித்த அச்­சங்­கத்தின் அசெல சம்பத்,

அரிசி விலைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மையால் உண­வுப்­பொ­தி­களின் விலையை 10 ரூபாவால் அதி­க­ரிக்க தீர்­மா­

னித்­துள்ளோம். இது இலா­ப­மீட்­டு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்பட்ட தீர்­மானம் அல்ல. அரி­சியின் விலை அதி­க­ரிப்பால் நாம் ஏற்­க­னவே உள்ள விலையில் உண­வுப்­பொ­தி­களை விற்­பதில் சிர­மப்­ப­டு­கின்­றோம்.

அத­ன­டிப்­ப­டையில் மரக்­கறி சாப்­பா­டொன்றின் விலை 100 ரூபா­வி­லி­ருந்து 110 ரூபா­வாகவும் மீன் உண­வுப்­பொ­தி­யொன்று 130 ரூபா­வி­லி­ருந்து 140 ரூபா­வாக அதி­க­ரிக்க ப்­பட்­டுள்­ளது. மேலும் கோழி இறைச்சி சாப்­பாட்டு பொதி­யொன்றின் விலையை 160 ரூபா­வி­லி­ருந்து 170 ரூபா­வா­கவும் அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் அரி­சியின் விலையை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. இதன் ­கா­ர­ண­மாக அரி­சியின் விலை மிகவும் அதி­க­ரித்­துள்­ளது.

சிலர் களஞ்­சி­யப்­ப­டுத்­தும்­போது பெரு­ம­ளவு அரி­சியை சந்­தைக்கு கொண்­டு­வ­ராமல் பதுக்­கி­வி­டு­கின்­றனர். அது­மட்­டு­மல்­லாது விலங்­கு­க­ளுக்­கான உண­விலும் பாரிய தட்­டுப்­பாடு நில­வு­கின்­றது. இவ்­வா­றான செயற்­பா­டு­களை தவிர்க்க முறை­யான திட்­ட­மிடல் அவ­சி­ய­மாகும்.

எனவே இலங்கை நுகர்வோர் சபைக்கு நாம் ஒரு சவாலை முன்வைக்கின்றோம். முடியுமானால் நாடளா

விய ரீதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பதுக்கி வைத்துள்ள அரிசி மூடைகளை மீட்டுக்காட்ட வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments