Subscribe Us

header ads

அல் அக்ஸா தேசிய பாடசாலை SDC யுடன் கற்பிட்டி EDA அமைப்பினர் சந்திப்பு - படங்கள்-


கற்பிட்டி Education Development Association அமைப்பினர்  16.09.2016 அன்று அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் EDA அமைப்பினரின் வேண்டுகிளுக்கிணங்க, சனிக்கிழமை 17.09.2016 அல் அக்ஸா தேசிய பாடசாலை SDC உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த சந்திப்பின் போது Education Development Association அமைப்பினர் தாமாக முன் வந்து பாடாசாலையின் வளர்ச்சியில் SDCயுடன் இணைந்து செயற்படும் முகமாக இரண்டு  EDA யின் இரண்டு திட்டங்களை முன்மொழிந்தனர். 

ஒன்று பாடசாலையில் நிலவும் துறைசார் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணல்; அந்த வகையில் உயர்தர வணிகப் பிரிவில் நிலவும் ஆசிரியர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிரத்தியோக வகுப்புகளுக்கான ஆசிரியைகளை கொண்டு வருதல் அத்தோடு அதில் ஒரு ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பனவை 10,000.00 ரூபாவை EDA அமைபினரே பொருப்பேற்பதாகவும் அறிவித்தனர். இதில் SDC மற்றும் EDA யின் முயற்சியில் 2017ம் ஆண்டுக்கான உயர்தர வணிகப் பிரிவை மீளவும் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாவது அம்சமாக பாடசாலையுடன் பெற்றோகளின் தொடர்பை/ உறவினை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கும் செயற்திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டது. அந்த வகையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளை தொடராக நடத்துதல். வருட இறுதியில் சகல பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பங்குகொள்ளும் வகையில் பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சி ஒன்றினை நடத்துதல். இது போக பாடசாலை அபிவிருத்தி தொடர்பான இன்னும்பல செயற்திட்டங்களை செய்வதற்கு Education Development Association அமைப்பினர் தயாராகி வருவதாகவும் விரைவில் அவற்றை நடைமுறைக்கு படுத்த தீர்மனிதுள்ளதாகவும் தெரிவித்தனர்.


இது தொடர்பாக KV க்கு கருத்து தெரிவித்த EDA அமைப்பினர், அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக்கு தங்களால் முடிந்த சேவைகளை செய்ய தாமாக முன்வதுள்ளதோடு கற்பிட்டியை மையமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகளை அல் அக்ஸா தேசிய பாடசாலை தொடர்பின் கரிசனைகொண்டு பணம், மனித மற்றும் பௌதீக வள உதவிகளுக்கு முன் வந்து செயற்படுமாறு வேண்டியதோடு. அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வளர்ச்சியில் அனைத்து தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாரும் பொது அழைப்பினை விடுத்தனர்.





Post a Comment

0 Comments