அரசாங்கத்தின் "ஊருக்கு ஊர்" என்ற வேலைத் திட்டத்தின் கீழ் தென்னை உற்பத்தி உர மானியம் புத்தளம் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட 500 பேருக்கு வழங்கப்பட்டது .
தெங்குச் செய்கை சபைத் தலைவர் கபில எக்கடாவல தலைமையில் நடை பெற்ற இவ்வைபவத்தில் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார, எம்.எச்.எம். நவவி எம்.பி. ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எம். என்.எம். நஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதற் கட்டமாக தெங்குச் செய்கை செய்யும் 500 பேருக்கு (புத்தளம், முந்தல், கற்பிட்டி, வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுகள்) ஒரு மரத்துக்கு 56 ரூபா வீதம் வழங்ப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக உரமானியம் வழங்குவது தொடரவுள்ளதாகவும் தெங்குச் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.ஹிஜாஸ் தெரிவித்தார். 20 பேர்ச்சஸ் முதல் 5 ஏக்கர் வரை தென்னை உள்ளவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள முடியும்.
-Mohamed Muhsi-
0 Comments