Subscribe Us

மின்னொளியில் நடைபெற்ற கடற்கரை புட்சால் கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் பலஸ்தீன் அணி வெற்றி

மின்னொளியில் நடைபெற்ற கடற்கரை புட்சால் கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் பலஸ்தீன் அணி வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளதோடு இரண்டாம் இடத்தினை டெரர் அணி பெற்றுக்கொண்டுள்ளது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு நிதி திரட்டும் நோக்கில் ஸாஹிராவின் அனைத்து பழைய மாணவர் சங்கங்களை இணைத்த அமைப்பான சஹீரியன்ஸ் யுனைடெட் அமைப்பு இந்த போட்டி தொடரினை ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக புத்தளம் ஹைடைப், அமைதி தன்னார்வ தொண்டு நிறுவனம், சர்வதேச இளைஞர்கள் சம்மேளனம் (ஐ.வை.சி) ஆகிய அமைப்புக்கள் இப்போட்டிகளுக்கு வழிகாட்டி இருந்தன.

அணிக்கு 05 வீரர்களை கொண்ட இந்த போட்டியானது கோல் காப்பாளர் இல்லாத, ஓப் சைட் இல்லாத 10 நிமிடங்களை கொண்ட போட்டியாகும்.

சாம்பியனாகிய அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் ரொக்கப்பணமாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டன.

-Mohamed muhsi-






Post a Comment

0 Comments