"பாயிஸுக்கு அக்கட்சியின் அமைப்பாளர் அந்தஸ்து கிட்டுமானால் மனதார அதை நான் வரவேற்கிறேன்...காரணம் எமது பிரதேசம் அபிவிருத்தி அடைய அந்த நியமனம் வழி வகுக்கும்...
தனது மேலிடத்து அதிகாரத்தின் மூலம் தம்மால் முடியுமான அளவு மக்களுக்கான சேவைகளை பெற்றுத் தரவே அவர் முயற்சிப்பார்...அதன் மூலம் சேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்ட விஷயங்களில் ஆரோக்கியமான போட்டி ஒன்று உருவாகும்...
பலமிக்க அரசியல் போட்டி எதுவுமில்லாத இச்சூழ்நிலையிலேயே எமது தலைவர் அமைச்சர் ரிஷாத் கோடி கணக்கான ரூபாய் அபிவிருத்தி திட்டங்களை ஒதுக்கியுள்ளபோது பாயிஸ் போன்ற அரசியல்வாதிகள் போட்டியாளர்களாக இறங்கினால் களப்பணியாற்றும் உத்வேகம் எம்முள் அதிகரிக்கும் சந்தர்ப்பமே ஏற்படும்...
நானோ அல்லது நவவி எம்.பி.யோ எமது மேலிடத்தை நச்சரித்து இன்னும் இன்னும் சேவைகளையும்,அபிவிருத்திகளை யும் பெற்றுக் கொள்ளவே முயற்சிப்போம்...
சகோதரர் பாயிஸுக்கு அமைப்பாளர் பதவி கிட்ட வேண்டுமென்று பிரார்த்திப்பதோடு மீண்டும் அரசியலில் களமிறங்க வருக வருக என்று வரவேற்கின்றேன்"...
இவ்வாறு ACMC அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் தொலைபேசி உரையாடலின்போது கூறினார்...
-IBRAHIM NIHRIR-
0 Comments