-Raseen Rasmin-
புத்தளம் அல்காசிமி சிட்டியில் இயங்கி வரும் இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புனித ஹஜ்ஜூப்பெருநாள் விஷேட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் அல்காசிமி சிட்டி கிராமத்திலுள்ள மன். ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸப்பிரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாகிகள், ஆசிரியர்கள், உலமாக்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
















0 Comments