புத்தளம், கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி உள்ள பிரதேசத்திற்கு சொந்தமான கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஊட்டச்சத்து பையில் பாவனைக்குதவாத உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்ததாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய (17) ம் திகதி கல்பிட்டி பொது சுகாதார கண்காணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறிப்பிட்ட கூட்டுறவினுள் மேலும் பாவனைக்குதவாத உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் 2500 ரூபா பெறுமதியான இந்த ஊட்டச்சத்து அடங்கிய பையில் பயறு, கடலை, பருப்பு, அரிசி, பால்மா மற்றும் டின்மீன் உட்பட பல உணவுப் பொருட்கள் காலாவதியாகி உள்ளதன் காரணமாக பிரதேசத்தின் கர்ப்பிணித் தாய் ஒருவரினால் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு செய்த முறைப்பாட்டிற்கமையவே அங்கு வருகை தந்த கல்பிட்டி பொது சுகாதார கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாவனைக்குதவாத உலர் உணவுப் பொருட்கள் இருந்ததாகவும் சில பொருட்கள் காலாவதியாகியும், பழுதடைந்தும் இருந்ததை இதன் போது காணக்கூடியதாக உள்ளதுடன் பொது சுகாதார கண்காணிப்பாளர் உட்பட பலர் குறிப்பிட்ட கூட்டுறவு நிலையத்தை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் மேலும் மனிதர்களின் பாவனைக்குதவாத பொருட்கள் அடங்கிய பொதிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதடன் குறிப்பிட்ட கூட்டுறவுக்கு பொறுப்பான முகாமையாளருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கும் தீர்மரிக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
0 Comments