-ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மனித வள அபிவிருத்தி அமைப்பினரால் இரத்ததான முகாம் ஒன்று புத்தளம் மஸ்ஜித் வீதி கலாச்சார மண்டபத்தில், கடந்த சனிக்கிழமை (17) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
சிலாபம் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியக்குழுவின் இரத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி கலந்துகொண்டனர்.
புத்தளம் மனித வள அபிவிருத்தி அமைப்பினரும் இரத்தான நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Photos - Mohamed Muhsi
0 Comments