புத்தளம் கடற்கரை வீதி பொது நூலகத்துக்கு 35,000.00 ரூபா பெறுமதியான Encyclopedia புத்தக தொகுதியை கடந்த (2016.09.01) அன்பளிப்பாக வழங்கிவைத்தார் முன்னாள் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள்.
மாணவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, நீண்ட நாள் குறையாக இருந்த Encyclopedia புத்தக தொகுதியை சம்பிரதாய பூர்வமாக கையேற்கும் நிகழ்வு இன்று (2016.09.01) கடற்கரை பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதில் முன்னாள் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ், நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். சபீக், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எம்.எம்.எஸ். ரத்னசிங்ஹ, பொது நூலக நூலகர் திருமதி. நைலாராணி உட்பட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments