Subscribe Us

header ads

இலங்கை பைதுல் மால் நிறுவனத்தினால் யாழ் முஸ்லீம்களிற்கு பல்வேறு உதவிகள் - படங்கள்


பாறுக் ஷிஹான்



யாழ்ப்பாணம் மக்கள் பணிமனை தலைவர்   பீ.ஏ.சுபியான் மௌலவியின் நீண்ட கால  வேண்டுகோளுக்கு  அமைய இம்முறை  ஸக்காத் நிதியில் இருந்து யாழ் மாவட்ட முஸ்லிம்களுக்கு  இலங்கை பைதுல் மால் நிறுவனத்தினால் பல்வேறு உதவிகள்  வழங்கப்பட்டிருந்தது.

 இதற்கமைய முப்பத்தி ஐந்து இலட்சம் ரூபாய்(3500000)   பைத்துல் மால் நிறுவனம் யாழ் முஸ்லீம் மக்களிற்காக ஒதுக்கீடு செய்தது.

இதற்கமைய இவ்வுதவி திட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமை(2) நண்பகல்  யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மக்கள் பணிமனை தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சுமார் 12 பள்ளிவாசல் மகல்லா வாசியினருக்கு பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 இதன் போது தையல் இயந்திரம் துவிச்சக்கர வண்டிகள் சமையல் உபகரணங்கள் மீன்பிடி உபகரணங்கள் வீட்டுத்தேவைக்கான பாவனைப் பொருட்கள் என பலவிதமான பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன







































Post a Comment

0 Comments