Subscribe Us

புத்தளம் தள வைத்தியசாலையில்  விபத்து பிரிவு நிர்மாணப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா - படங்கள்

ரஸீன் ரஸ்மின் 

புத்தளம் தள வைத்தியசாலையில் வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் 44 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (18) இடம்பெற்றது. 

புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சுமித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாகாண சுகாதார அமைச்சர், மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் முகம்மட் பரீத், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், சிந்தக்க மாயாதுன்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.   








Post a Comment

0 Comments