Subscribe Us

header ads

கொழும்பு குப்பைகள் புத்தளத்தில் கொட்டுவதை எதிர்த்து ஆக்கபூரவமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில்லை



புத்தளத்தில் கொழும்பு குப்பைகள் கொட்டும் அரசாங்கத்தின் புனிதத்திட்டம் செப்டெம்பர் / 2016 முடிவடைவதட்குள் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிடும் என்று நினைக்கின்றேன்.

கொழும்பு குப்பைகள் புத்தளத்தில் கொட்டுவதை எதிர்த்து ஆக்கபூரவமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை புத்தளம் அரசியல்வாதிகளால் அல்லது புத்திஜீவிகளால் மேட்கொள்ளப்படவில்லை. 

புத்தளம் நகரின் - நகரை அண்டியுள்ள பெரும்பகுதி மக்களுக்கு இதுவிடயமாகவிழிப்பூட்டப்படவோ, இதனை எதிர்ப்பது சம்மந்தமான பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இதுவரை எவரும் முன்வரவில்லை.

முஸ்லீம் அல்லாத மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இதுவரை சீரோவில்தான் ("0" ) உள்ளது.

சேகரிக்கப்பட்ட கையொப்பங்களில் கணிசமான மக்கள் இதுபற்றிய தெளிவின்றியே கையொப்பமிட்டுள்ளனர்.
முஸ்லீம் அல்லாத குறிப்பாக சிங்கள மக்களிடம் பெறப்பட்ட கையொப்பங்கள் வேண்டுதலுக்காக அக்கறையின்றி வைக்கப்பட்ட கையொப்பங்கள்தான்.

புத்தளம் நகருக்கு வெளியில் தூர இடங்களில் குறிப்பாக வண்ணாத்திவில்லு , கல்பிட்டி, மதுரங்குளி போன்ற பிரதேச மக்களிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பு கருத்துக்களையும் காணமுடியாமல் உள்ளது.

பெரும்பான்மை மக்களை சில கூட்டங்களுக்கு அழைக்கவும், அவர்களிடம் குறிப்பிட்டளவு கையொப்பத்தை பெற்றுக்கொள்ளவும் முடிந்ததே தவிர அவர்களை களத்தில் இறக்கி இதட்கு எதிராக போராடும் மனோநிலையை உருவாக்க எம்மவர்களால் முடியாமல் போய்விட்டது. 

பள்ளிகளில் கூட்டம் போடுவதையும் பள்ளிகளில் வைத்து இது விடயமாக பேசுவதையும்,பள்ளிகளில் அல்லது முஸ்லிம்களின் இடங்களில் வைத்து இது விடயமாக பேசுவதையும் தவிர்த்து பொதுவான இடங்ககளில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்பதை நான் பல முறை முக நூலின் மூலம் குறிப்பிட்டிருந்தேன் என்றாலும் எமது கருத்துக்கள் எடுபடுவது குறைவு.

எனவே இது விடயமாக அரசியல்வாதிகளை வைத்து நடவடிக்கைகளை மேட்கொள்ளும்படி மக்களையும், அரசுக்கெதிராக வாலிபர்களை களமிறக்கி அவர்களின் உயிருடன் - வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று புத்தளத்து புத்திஜீவிகளையும், அரசியல் பிற்போக்கு சக்திகளையும் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.

-Uwais Abusaleh-

Post a Comment

0 Comments