Subscribe Us

EDA அமைப்பினால் அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு Sofa set அன்பளிப்பு...



கற்பிட்டி Education Development Association - EDA அமைப்பினால் அல் அக்ஸா தேசிய பாடசாலை காரியாலய உபயோகத்திற்காக ரூபாய் 60,000/- பெறுமதியான  Sofa set கடந்த (18/07/2018) அன்பளிப்புச் செய்யப்பட்டது.



2005 ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி கற்பிட்டி பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியினை நோக்காக கொண்டு 2001 ம் ஆண்டு அல் அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய சில மாணவர்களின் முயற்சியினால் Education Development Association – EDA என்ற அமைப்பு காலத்தின் தேவையை கருதி ஸ்தாபிக்கப்பட்டது. இவ் அமைப்பின் செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மாத்திரம் இருந்தபோதும் கற்பிட்டி பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடலசாலைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



சுமார் 4 வருட கால இடைவெளிக்குப்பின் EDA (Education Development Association) அமைப்பினர் அவர்களது செயற்பாட்டை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்த Sofa set ( நீள் சாய்விருக்கை) யினை EDA அமைப்பின் தலைவர் சட்டத்தரனி M.R.M சபீஸ் அவர்ளும், உப தலைவர் கணக்காளர் M.N.M அன்பஸ் அவர்களும் EDA அமைப்பு சார்பாக பாடசாலை அதிபர் திருமதி. மெஹ்ராப் றோஸ் அவர்களிடம் கையளித்தனர். இந்நிகழ்வின் போது பாடசாலைக்கு பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி அவர்களும் கலந்துகொண்டார்.



இது பற்றி KV க்கு கருத்து தெரிவித்த EDA அமைப்பின் தலைவர் சட்டத்தரனி M.R.M சபீஸ்; 15 க்கும் குறைவான அங்கத்தவர்களை கொண்டும் இயங்கிவரும் EDA அமைப்பு நான்கண்டு கால இடைவெளிக்குப் பின்னர் அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தையிட்டு மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்! குறிப்பாக எமது பிரதேசத்தின் கல்வி வளர்சிக்காக பல திட்டங்களை செயற்படுத்த இருப்பதாக தெரிவித்ததோடு அமைப்பின் அங்கத்தவர்களை நினைவுகூர்த்து நன்றியையும் தெரிவித்தார்.





Post a Comment

0 Comments