பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் சரியாக உடற்பயிற்சி செய்வதில்லை, ஒழுக்கத்தை கடைபிடிப்பதில்லை மற்றும் உடற்தகுதி பிரச்சனை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனால் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் ராணுவ முகாம் சென்று பயிற்சி எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி வீரர்கள் ராணுவ முகாம் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு புஷ்-அப்ஸ், சல்யூட் அடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அசத்தலாக வெற்றி பெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் ராணுவ வீரர்கள் சல்யூட் அடிப்பது போல் கம்பீரமாக சல்யூட் அடித்தும், புஷ்-அப்ஸ் எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


0 Comments