Subscribe Us

வெற்றியை கொண்டாடிய நியூ பிரண்ட்ஸ் அணி - படங்கள்


நோன்புப் பெருநாளை முன்னிட்டு Silent Volunteersஆல் நடாத்தப்பட்ட Fast Five Futsal போட்டியில் வெற்றி பெற்ற தில்லடியை சேர்ந்த New Friends அணிக்கு நமது போட்டி நிகழ்வின் உத்தியோகபூர்வ அனுசரனை வழங்கிய ZoomKarting Motor Sports Puttalam நிறுவனம் நேற்று 180,000 ரூபா பெறுமதியான ZoomKarting வவுச்சர் ஒன்றையும் 30,000 ரூபா பணப்பரிசையும் வழங்கிவைத்தது.

இந்த ZoomKarting நிறுவனம் புத்தளம் பாலாவி என்ற பிரதேசத்தில் ஒரு அழகான தோட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய உண்மையான ரேஸிங் கார்களையும், ஓடுபவர்கள் எவ்வளவு நேரத்தினுள் எந்த அளவு வேகமாக ஓடுகிறார்கள் என்பதனை காட்டும் தொழில்நுட்பத்தையும் அதற்கே உரிய சூழலோடு அமைத்து மிகவும் குறைவான கட்டணங்களுடன் பொதுமக்களுக்கு சேவையை வழங்கிவருகிறது.

இந்த இடத்திற்கு சென்று ரேசிங் அனுபவத்தை பெறுவதோடு மேலதிகமாக 8 Ball Pool விளையாட்டு, மேசையில் கால்பந்தாட்டம் விளையாடும் விளையாட்டு, PlayStation விளையாட்டு, அங்கு வருகை தருவோருக்கு உணவு மற்றும் குடிபானங்கள் அருந்த PIT Café (Canteen) என பல விடயங்களையும் உள்ளடக்கிய PIT Stop எனப்படும் இன்னொரு பிரதேசமும் அமைந்திருக்கிறது.


இங்கு விஜயம் செய்த வெற்றிபெற்ற New Friends கழகத்தின் வீரர்கள் அனைவரும் மேலே குறிப்பிட அனைத்து சேவைகளை இலவசமாக பெற்றதோடு மேலதிகமாக இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் Max Power Extreme Programஇல் MBW Tire Package எனப்படும் ஒரு வருடத்திற்கு இலவசமாக ரேசிங் கார் ஓடக்கூடிய உறுப்பினர் அட்டை ஒன்றையும் செயற்பாட்டு முகாமையாளர் எம்.ரிப்கான் மூலமாக பெற்றுக்கொண்டார்கள்.

உங்கள் காலடியில் இருக்கும் இந்த இடத்தின் மூலமாக நீங்களும் இந்த அனுபவத்தைப் பெற்றிடுங்கள்..

-Silent Volunteers-























Post a Comment

0 Comments