கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு உடனடியாக பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மத்துகம மீகஹாதென்ன பாலர் பாடசாலையில் அத்து மீறி பிரவேசித்ததாக பாலித தெவரப்பெரும மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவரப்பெருமவை நேற்று மருத்துவர்கள் பரிசோதனையிட்டுள்ளனர்.
சிறைச்சாலை மருத்துவர்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது உடனடியாக பாலித தெவரப் பெருமவிற்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளனர்.
பாடசாலை சம்பவத்தின் பின்னர் கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அறிக்கைகளையும் கவனத்திற் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவையே பிரதி அமைச்சர் உட்கொள்கின்றார் என களுத்துறை சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments