Subscribe Us

ஜனவரியின் பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்..


அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான நேர்முக பரீட்சைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments