11.07.2016 - புத்தளம் ஆனந்தா பாடசாலையில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாட்டிலே திரு.இல்ஹாம் மரைக்கார் அவர்களினால் அருவாக்காடு குப்பை திட்டம் சம்மந்தமான எதிர்ப்பு மனுவும் பொது மக்களின் கையெழுத்துக்களின் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் மாநாட்டிலே ஜனாதிபதியை சந்தித்து இம்மனுவை சமர்ப்பிக்க பல தடைகளை தாண்டியே செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
இம்மனுவில் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்களை எழுதியுள்ளதாக திரு.இல்ஹாம் மரைக்கார் கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.
#CleanPuttalam புத்தளத்தைப் பாதுகாப்போம்
இலங்கையின் குப்பை
நகரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் : இங்கையின் வர்த்தக நகரம் கொழும்பு
என்பதைப்போல் இலங்கையின் குப்பை நகரம் புத்தளம் என இன்னும் சில காலத்தின் பின்
சொல்வார்கள்.
இலங்கையின் தலைநகரம் சுமார் ஒரு நாளைக்கு 1200 மெற்றிக் டொன் கூளங்களை வெளியாக்குகின்றது.
இந்த கூளங்கள் தற்போது கொலன்னவா மீதொடமுள்ள என்ற இடத்தில் குவிக்கபாட்டு வருகிறது.
இப்படி ஒவ்வொரு நாளும் கொட்டப்படும் கூளங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதோ
தெரியாது? ஆனால்
குவிக்கப்பட்ட கூளங்களை குறைப்பதற்காக 107 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஒரு
திடக் கழிவு அகற்றும் மையம் ஒன்றை புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் அமைப்பதற்கு
இலங்கை அமைச்சரவை 2014 ஆம் ஆண்டு அனுமதியை வழங்கியது.
இனிவரும் காலங்களில் மீதொடமுள்ள பிரதேசத்தில்
கழிவுகள் சேர்க்கப்பட்டு, 20 அடி கொள்கலன்கள் கொண்ட ரயில் வண்டிகள் மூலம் 30 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஹோல்சிம்
நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட அறுவாக்காடு பிரதேசத்திற்கு அருகில்
கூளங்கள் கடத்தப்படும் எனவும் திட்டமிடப்பட்டது. இந்த செயல்திட்டம் சுமார் 4,700,000
கன மீட்டர்
குப்பைக் கூளங்களை சுமார் 10 வருடங்களுக்கு உறிஞ்சும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் நிச்சயம் எமது நாட்டுக்கு
தேவையானது என்பதை உணரும் ஒரு குடிமகனாக சிந்திக்கும் நான் அதே வேலை ஒரு சுற்றுச்
சூழல் ஆர்வலராக நமது பிரதேசம் இந்த திடக் கழிவு அகற்றும் மையத்திற்கு பொருத்தமான
இடம் இல்லை என்பதை பின்வரும் (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில்
குறிப்பிடப்பட்ட) காரணிகளை அடிப்படையாக்கொண்டு உறுதியாக கூறிக்கொள்ள விரும்கிறேன்.
·
சுமார் ஒரு மயில் தூர வளையத்தில் இலங்கையின்
முக்கியமான பழமையான தேசிய பூங்காவும், சிறுத்தைகளின் வசிப்பிடமாகவும் மற்றும்
இலங்கையின் புராதன இயற்கை ஏரிகளை கொண்ட வில்பத்து வனம் அமைந்துள்ளது. இந்த
இடத்திக்கு கூளங்கள் கொண்டுவரப்படுவதனால் அங்குள்ள யானைகள் மற்றும் பல காட்டு
விளங்குகள் அடிக்கடி கூளங்களின் வாசனையில் மோப்பம் பிடித்து வரக்கூடும் எனவும், அங்கு வரும் காட்டு விளங்குகளுக்கும் அருகே
இருக்கும் கங்கை வாடி மீன்பிடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குமிடையே முறுகல்
நிலையை ஏற்படும் அபாயம் உள்ளது.
·
இலங்கையில் இதுவரைக்கும் இரண்டே இரண்டு
இடங்களில் கிடைக்க கூடிய இயற்கை சமநிலையை பேணுவதற்கு மிகவும் அவசியமான ‘Bu-kollu’
என்று சிங்கள
சகோதரர்களால் அழைக்க கூடிய Rhynchosia velutina தாவரம் இல்லது செடி அருவக்காட்டை சார்ந்த
பகுதியிலேயே பரவலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
·
பிரமாண்டமான மற்றும் எழில்மிகுந்த சதுப்புநில
கண்டல் தாவரங்கள் இந்த பிரதேசத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கலா ஓயா
மற்றும் லுனு ஓயா முகத்துவாரங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
·
ஹோல்சிம் நிறுவனத்தின் குத்தகைக்கான
ஒப்பந்தத்தின் நேரம் இலங்கையை சேர்ந்த பல புவியியல் நிபுணர்கள் ஹோல்சிமுக்கு
கொடுக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து “வெடி பிடிய” என்று அழைக்கக்கூடிய ஒரு குறிப்பட்ட
பிரதேசத்தை நீக்க வேண்டும் எனவும் அங்கு சுமார் 25000 மில்லியன் ஆண்டுக்கு முன் வாழ்ந்த கடல்
உயிரினங்களின் எலும்புக்கூடுகள் புதைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். அதனால்
ஹோல்சிம் நிறுவனம் அந்த பிரதேசத்தை அவர்களின் குத்தகை பிரதேசத்தில் இருந்து
நீக்கியது மட்டுமல்லாது இலங்கை தொல்பொருள் திணைக்களம் பாதுக்கப்பட வேண்டிய இடமாக
இதனை அடையாளம் செய்தது. அந்த அடையாளப்படுத்தபட்ட இடம் இந்த பிரதேசமே.
இப்படி இலங்கையின் இயற்கையில் எழிலையும்
சமநிலையையும் அமைதியாக பேணிப் பாதுகாக்கும் பிரதேசத்தில் சூழலை மாசுபடுத்தும்
குப்பைகளை கொண்ட வந்து இந்த பிரதேசத்தை முற்றுமுழுதாக அழிக்க ஒரு போதும் அனுமதிக்க
முடியாது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்பட
வேண்டுமாயின் மத்திய சுற்றாடல் அதிகார சபை, வடமேல் மாகான சபை மற்றும் வனவிலங்கு
பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகள் பெறப்பட வேண்டும் ஆகவே இந்த சபைகளுக்கு
நமது மக்களின் எதிர்ப்புகளை உரியவர்களால் கொண்டு செல்ல வேண்டிய அதே நேரம் சமுக
வலைத்தளத்தில் #CleanPuttalam என்ற ஹேஸ்டேக் hashtag
மூலம் தமது
எதிர்ப்பினை அனைத்து தரப்பினரும் எந்த வித வேறுபாடும் இன்றி தெரிவிக்க வேண்டும்
என்று தயவாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த செயற்திட்டத்தை இந்த அரசாங்கம் வேறு ஒரு
இடத்திலோ அல்லது தொழில்நுட்பங்களின் உதவியோடு மாற்று தீர்வினையோ பற்றி யோசிக்க
வேண்டிய அதே நேரம் குப்பை கூலங்களுக்கு முற்றிப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளாக
மருசுலற்சி முறை, பொலிதீன்
மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளுக்கு தடை, போன்ற விடயங்கள் அறிமுகப்படுத்தி
மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டு பூஜ்ஜிய கழிவு நாடாக
நமது நாட்தை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் இந்த அரசாங்கத்தை தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி


0 Comments