Subscribe Us

header ads

வினாவுக்கு பதிலளிப்பதற்கு நிழல் அமைச்சுக் கூட சபையில் இல்லையே : சபையில் நகைச்சுவை

(ப. பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 


தனது வினாவுக்கு பதிலளிப்பதற்கு நிழல் அமைச்சுக் கூட  சபையில் இல்லையே என  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவும்,  எதிர்க் கட்சி பிரதமர் கொறடாவும், ஜே.வி.பி.யின் தலைவருமான அநுர திஸாநாயக்க எம்.பி. நகைச்சுவையாக கூறினார்கள். 
பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை  நிலையியற் கட்டளை 23 இன் கீழ்  2 இல் விசேட வினாவை  அநுரகுமார திஸாநாயக்க எம்.பி.முன்வைத்தார்.  இவர் தனது வினாவை தொடுக்கமுன்னதாக யார்  பதிலளிக்கப் போகின்றார்கள் என பிரதிசபாநாயகர்  திலங்க சுமதிபாலவிடத்தில் கேட்டார். 
அதன்போதே எழுந்த  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தன்னிடம் அவ்வினாவுக்கான பதில் வழங்கக்கூடிய ஆவணங்கள் இருக்கா என பரிசோதனை செய்தவாறே என்ன வினா கேட்கப்போகின்றீர்கள் என்றார்.  அதன்போது  அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. நான் தான் கேள்வி கேட்க எழுந்தேன் என்னிடம் கேள்வி கேட்கின்றீர்களே  என்றார். 
அதன்போது புன்னகைத்தவாறே  குறித்த வினா தொடர்பாக விடயத்தை கூறிய அமைச்சர் லக் ஷ்மன்  கிரியெல்ல சம்பந்தப்பட்ட விடயத்திற்கான   அமைச்சரும் இல்லை.  பிரதியமைச்சரும் இல்லை என்பதால் உங்கள்  வினாவைத் தொடுப்பதால் பிரயோசனம்  இல்லை என்றார்.  அத்தோடு  புன்னகைத்தவாறே நிழல் அமைச்சரவை இல்லையென்றார். அதன்போது குறுக்கீடு செய்த அநுரகுமார திஸாநாயக்க எம்.பி  அமைச்சரும் இல்லை, இராஜாங்க பிரதி அமைச்சரும் இல்லை, ஆகக்குறைந்த நிழல்  அமைச்சரும் இல்லை என ஒன்றிணைந்த எதிரணியினரைப்  பார்த்து புன்னகைத்தவாறே கூறியதோடு தனது வினாவையும் சபையில் முன்வைத்தார். 

Post a Comment

0 Comments