முஸ்லிம்களின் ரமழான் பெருநாளுக்காக சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 268 மெட்ரிக்தொன் பேரீச்சம்பழத்திற்காக தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய சமய விவகார அமைச்சால் 22.82 மில்லியன் ரூபா வரியாக செலுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23இன் கீழ் 2ஆம் விசேட வினாவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான டக்ளஸ் தேவானந்தா ரமழான் பெருநாளுக்காக முஸ்லிம் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளினால் அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் பழத்திற்கு அரசாங்கம் வரி நீக்கம் செய்வது குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்கத்தின் கீழ் விசேட பொருட்களுக்கான வரிவிலக்களிப்பின் கீழ் பெருநாளுக்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம்பழத்திற்கு வரிவிலக்களிப்புச் செய்யப்பட்டதானது நடைமுறையில் உள்ளது.
சாதாரண ஒரு கிலோ பேரீச்சம்பழத்துக்கு 60 ரூபா வரி விதிக்கப்படுகின்றது. எனினும் மதங்களின் விசேட விழாக்கள் நிகழ்வுகளுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதுதான் வழக்கமாகவுள்ளது.
இம்முறை ரமழான் பெருநாளுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக சவூதி அரேபியா உட்பட 268 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் அன்பளிப்பாக வழங்கியிருந்தன.
இதற்கான வரிப்பெறுமதியான 22.82 மில்லியன் ரூபாவை தபால், தபால் சேவைகள் இஸ்லாமிய சமய விவகார அமைச்சால் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வெவ்வேறு முறைமைகள் காணப்பட்டபோதும் இம்முறை நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மதிப்பை வழங்கி நல்லிணக்கத்தை தோற்றுவிப்போம் என்றார்.
0 Comments