நம்ம யார்ட வழியில நிக்கிறோம் என்று பார்த்துக்க வேணுமா நம்மட நண்பர்கள் யாரென்று பார்த்தா போச்சு.
ஒவ்வொரு மனிதனினதும் பாதைகளை தேர்ந்தெடுப்பதில் நண்பர்கள் என்பவர்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.மனம் ஒன்றை யாசிக்கும் போது நாங்கள் செய்வது நமது கருத்துக்களோடு சேர்ந்து போபவர்களை ஆதரிப்பதும் நமது கருத்துக்கு முறனானவர்களை களைந்தெரிவதுமே.உண்மையில் நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் கருத்து முறன்பாடுகள்காணப்பட்டன.ஆனால் சகாபாக்களோ அதை அலட்டிக் கொள்ளவில்லை.வாழ்க்கையில் நிரந்தர எதிரிகளை அவர்கள் முஸ்லிம்களான பின்னால் உருவாக்கிக் கொள்ளவில்லை.அவர்கள் நபி(ஸல்) அவர்கள் எதைச் சொன்னார்களோ அதை செய்யவே முன்டியடித்தார்கள்.
இன்றைய இலங்கைச் சமூகத்தின் மனோபாவம் என்பது வாலெடுத்தவனெல்லாம் பெயர்தாங்கி போராளி.யார் கையில் துட்டு இருக்கிறதோ அவன் ஷிக்ர்கைச் செய்தாலும் அவன் பின்னால் இருந்து நக்கும் கூட்டமிருக்கிறது.இங்கு இஸ்லாத்தை ஒரு ஆயுதமாக மட்டும் தன் சுயநலத்துக்காக பாவித்து சில உரிமைகளைக் கூட சலுகைகள் போல, தனக்கு மட்டும் இறக்கிய வஹி போல பாவிப்பவர்களும் எம் மத்தியில் உண்டு.இவர்களோடு நாங்கள் மார்கத்தை தெளிவு படுத்தப் போனால் வந்து சேர்வது நிரந்தரப் பகை மட்டுமே.
இன்னோரு போராளிகள் கூட்டம் புதிதாக தக்வா களத்தில் குதித்திருக்க காண்கிறோம்.இவர்கள் தான் இன்றைய பாரிய புரட்சியாளர்கள்.ஒருவகையில் சொன்னால் நவீன ஜாகிலியத்தை இஸ்லாத்தைக் கொண்டு பிரபல்யம் செய்யும் கூட்டம்.முகநூலில் இவர்கள் சொல்,செயல்,அங்கீகாரம் பார்க்க அட்சொட்டாக நபியை பின்பற்றி நடப்பவர்களாய் தம்மைக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.சொந்த வாழ்வை எட்டிப் பார்த்தால் சுபஹ்க்கு பள்ளிக்குப் போன சரித்திரம் காண்பதேயில்லை.ஆனால் இவர்களோடு கருத்து முறன்பாடு ஏற்பட்டால், இனி நபி(ஸல்) அவர்களோ,அல்லது இறைவன் வஹி அறிவித்தாலும் நீங்கள் நிரந்தர எதிரி தான்.உங்களுக்கதெராக பதிவுகள் பறக்கும்.விவாதங்கள் அரங்கேறி அவர்களின் நண்பர்களாலே உங்கள் சத்தியம் சிலுவையில் அறையப் படும்.இவர்களுக்கு நன்றாகவே தெரியும் மனட்சாட்சிக்கு முறனாக மார்க்கத்துக்கு முறனாக விதண்டாவாதம் என்று.ஆனாலும் தாங்கள் இரண்டாம் இடத்துக்கு போக விருப்பமில்லை என்பதால் உங்களை போட்டுத் தாக்குவார்கள்.
மூளைச் சலவைகள்.ஹராத்தை நியாயப் படுத்தியும் ஹலாலை உதாசீனப் படுத்தியும் மார்க்கத்தை தமக்கேற்ற படி பாவிக்கும் இவர்கள் உண்மையில் நினைத்துக் கொண்டிருப்பது தான் என்ன? இஸ்லாமிய கிலபா உருவாக்கம் என்ற போது ஆக்ரோஷமாக வந்து போகும் அல்லாஹூ அக்பர்கள் தனிப்பட்ட வாழ்வென்று வர குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.
இது தான் இன்றைய களநிலவரம்.உண்மையில் இஸ்லாமிய வாழ்வை யார் தூய்மையாகப் பின்பற்றி வாழ்கறோம் என்பதே சில நேரம் confused.குர்ஆனும் ஹதீஸூம் தான் வாழ்வென்று அடித்துச் சொல்றவன் கூட தான் என்று வர சுயநலமே முன் நிற்க காண்கிறோம்.
நீங்கள் உங்கள் நண்பரின் மார்க்கத்தில் இருக்கிறீர்கள் என்ற நபி மொழிக்கமைய இறைவனோடு உறவாடும் உங்கள் ஈமானை பரிசுத்தப் படுத்தும் உறவுகளோடு இறைவன் நட்பை எங்களுக்கு உருவாக்கித் தருவானாக!
-Binth Fathima
0 Comments