வழமையாக வீட்டுக்கு வேலை விட்டு ஒரு முச்சக்கர வண்டியில் டவுனில் இருந்து போவேன்.அதற்கான கட்டணம் 120/-130/= மட்டுமே.சிலர் எவ்வளவு எந்த நாளும் கொடுபீங்களோ அதைத் தாங்க என்பான்க.இப்படி நோன்பின் நடுப்பகுதியில் ஒரு நாள் வர திக்ர் செய்த நல்ல சூரத்தோடு அந்த சாப் ஒருவர் வண்டியில் இருக்கவே அவரைப் பேசிக் கொண்டு வந்தேன்.வீடு வர எவ்வளவு வேண்டும் என்று கேட்க 150/ என்றார்.வழமையாக இவ்வளவு தான் கொடுப்பேன் என்ற போதும் இல்லை இது தான் எனது கணக்கு என்று சொல்லி வாங்கிப் போனார்.
இதே நேரம் ஊரில் புடவை வியாபாரம் செய்யும் ஒரு பெண்மணி வந்தார்.குறித்த மௌளவி வீட்டுக்கு உடுப்பு விற்பனை செய்ய அவரோ அதற்கான பணத்தை 50/ குறைத்துக் கொடுத்து விட்டு பின்னர் தருவதாக சொல்லியிருக்கிறார்.இன்னும் இல்லை.50/ கேட்க இவங்களுக்கும் வெக்கம்.இதே நேரம் கால் கண்வரை தொங்கும் ஜிப்பா சகிதம் நீண்ட தாடியோடு தொப்பியோடும் கற்பிக்கும் ஆசிரியர் வீட்டுக்கும் துணி போயிருக்கு.ஆனால் அவர் பணவிஷயத்தில் சுத்த மோசம்.சிலருக்கு பழைய கடன் பாக்கி.துணி வித்த பெண்மணிக்கு பணம் அறவிட முடியாக்கடனாகி விடும் என்பதில் கவலை.
மேற் சொன்ன மூன்று நபர்களும் தொழுகையாளிகள் பட்டியலில் சேர்ந்தவர்கள்.தவிர தவறாம சில்லா முடிப்பவர்கள்.சாப் பட்டத்தில் பிரபல்யமானவர்கள்.இவர்களைக் கொண்டு என்ன முன்மாதரிகளை நாங்கள் எடுக்கலாம்.ரோட்டிலும் போன இடத்திலும் ஸிக்ர் செய்ய தவறுவதில்லை.ஆனால் அடிப்படையான மனதின் மாற்றங்கள் எப்போது வரும்? தனது கப்றுக்கு எல்லாம் சரியாகி விடனும்.ஆனால் அடுத்தவன்ட வயித்துல நெருப்பா?
சுயநலங்களுக்கே பெயர் போனதாய் தங்களை மாற்றிக் கொள்வதா? வெறும் பள்ளிவாசல்களை மட்டும் நிரப்பிக் கொண்டு இவர்கள் அமல் இபாபத் என்றிருக்க மற்றவர்கள் பொருளாதாரம்,தனிமனித உருவாக்கம், சமூக மேனபாடு என்று உழைக்க அடுத்தவன்ட அடி வாங்குவதா? ஒரு வெள்ளம் வந்தால் நிவாரணத்துக்கு யார் போவது? ஒரு பிரச்சினையென்றால் யார் போவது? முஸ்லிம்களுக்கு அடிக்குற என்றால் யார் பாய்வது? அடிப்படையில் இவர்கள் சார்பாக இயங்கும் மத்ரஸாக்களில் கூட தற்பாதுகாப்புக்கலை,தலைமைத் துவப் பயிற்சிகள் வழங்கப் படுகிறதா என்றால் மிக்க குறைவே.
உலகில் ஒளி ஊடுவதா இடங்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சென்ற பெருமை இவர்களைச் சாரும்.பிளட்போம் வியாபாரியையும் பள்ளிக்கு கொண்டு வந்த பாக்கியம் பெற்றவங்க.ஆனால் அடிப்படை மனதின் மாற்றங்கள் என்றால் மாறவேயில்லை பலர் என்று சொல்ல வேண்டும்.மாற்றம் என்ன என்று பார்த்தால் வீட்டில் மனைவி பிள்ளைகள் உச்சந்தலை முதல் நிகாப் சட்டத்துக்குள் புகுத்தி பாதி பெண் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி இன்னொரு சாப்பின் மகனை மணமுடித்து வைப்பதும் அந்த பதினாறு வயது பெண் பிள்ளைப் பேற்றில் வைத்தியர்களிடமும் தாதிமாரிடமும் ஏச்சு வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம்.
கொள்கைகள் என்பது மிகத் தெளிவான தூய்மையானதாய் இருக்க வேண்டும்.தன்னால் மட்டும் சுவர்க்கம் போய் விடலாம் என்றால் மாபெரும் தப்பு.எங்கள் எண்ணங்களே சுவனம் போகும் என்பதை உணர வேண்டும்.எவ்வளவு அமல் செய்து பிரார்த்தனை செய்தாலும் அழுதாலும் தனக்கு மட்டும் கேட்டுப் போதாது.தவிர சமூகத்தை நேர்வழிபடுத்த என்று துஆ மட்டும் போதாது.செயல் நெறியில் அதை தானும் அறிமும் செய்ய வேண்டும்.
சில மனோரீதியாக மாற்றங்கள் வராத வரை இவர்கள் போன்றவர்கள் திறுந்தப் போவதில்லை.அத்தோடு 80% இவர்களால் மற்றைய 20% மானவர்களுக்கும் கொள்கை உருவாக்கத்தில் நல்ல பெயர் கிட்டுவதுமில்லை.
-Binth Fathima
0 Comments