Subscribe Us

header ads

தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானியர், சவுதி அரேபியா அறிவிப்பு


ஜெட்டாவில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி பாகிஸ்தானியர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாக சவுதி அரேபியா கூறிஉள்ளது.
 
ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் எதிரே ஆஸ்பத்திரிக்கு நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் காரில்வந்த மர்மநபர், காரில் இருந்து இறங்கி தூதரகத்தை நோக்கி வேகமாக நடந்தார். அவரை தூதரகத்துக்குள் நுழைய விடாமல் 20 மீட்டர் தொலைவில் பாதுகாவலர்கள் 2 பேர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது திடீரென அந்த மர்ம நபர், தனது உடலில் கட்டிக்கொண்டு வந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிர் இழந்தார். அவரிடம் விசாரணை நடத்திய தூதரக பாதுகாவலர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே நேற்றும் ஷியா இஸ்லாமியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து சவுதி அரேபியாவில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போலீசார் பலியாகினர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானியர்

இந்நிலையில் ஜெட்டாவில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று சவுதி அரேபியா அடையாளம் கண்டு உள்ளது.

தாக்குதல் நடத்தியது ஓட்டுநராக பணியாற்றி வந்த 35 வயது அப்துல்லாக் வக்கார்கான் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாக அந்நாட்டு மந்திரி கூறிஉள்ளார். அப்துல்லாக் மனைவி மற்றும் பெற்றோர்களுடன் கடந்த 12 வருடங்களாக ஜெட்டாவில் வசித்து வந்து உள்ளார் என்று தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் சவுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் சர்வதேச சமூகம் பதிலடி கொடுக்கவேண்டும் என்றும் கூறிஉள்ளார். 

Post a Comment

0 Comments