பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே தான் உண்ணாவிரதம் இருந்ததாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுவர்களின் பாடசாலை கல்வியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, வேறு வழியின்றியே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தான் குறித்த பாடசாலை விடயத்தில் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதற்கு முதல் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரிடமும் கொண்டு சென்றேன்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 9 முறைப்பாடுகள் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தான் மத்துகம பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்ததாகவும், உண்ணாவிரதம் ஆரம்பித்த போது 5 பெற்றோர்களையும், அவர்களது குழந்தைகள் ஐவரையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியிருந்தேன்.
இதேவேளை தன்னை நடிகனாகவும், உடலை கொண்டு அரசியல் நடாத்துவதாகவும் ஒரு சிலர்கூறுகின்றனர்.
எனினும், தான் பொதுமக்களுக்காகவே அரசியல் நடாத்துகிறேன் என்பதை அவர்களிடம்வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments