Subscribe Us

பாலித தேவ பெருமவின் போரட்டம் வெற்றி : 9 மாணவர்களுக்கும் பாடசாலை கிடைத்தது


மீகாதென்ன கனிஷ்ட பாடசாலைக்கு அனுமதி கிடைக்க பெறாது இன்னல்களுக்கு முகங்கொடுத்த 9 மாணவர்களும் வேறு பாடசாலை ஒன்றிற்கு சேர்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்ரிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த மாணவர்கள் மத்துகம புனித மேரி வித்தியாலயத்தில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 9 மாணவர்களையும் மீகாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்தில் சேர்த்து கொள்ளுமாறு அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு குறித்த மாணவர்களின் தாய்மாரும், பின்னர் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. 

Post a Comment

0 Comments