Subscribe Us

பாரியளவிலான மோசடியொன்று சிக்கியது (படங்கள்)

போலியான கடவுச்சீட்டுக்களை தயாரித்து வந்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன் போது 3 சந்தேக நபர்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொடிகாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நடாத்தப்பட்டு வந்த குறித்த நிறுவனத்தில் இருந்து போலி கடவுச்சீட்டுகள் 75ம் மற்றும ் குவைட் நாட்டுக்கான போலி விசா மற்றும் தேசிய அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் , விசா வடிவமைப்பிற்காக உபயோகித்த கணணி , அச்சியந்திரங்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் போலி முத்திரை , சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் முச்சக்கரவண்டியொன்றும் , சிற்றூர்ந்து ஒன்றும் இதன் போது காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் போலி கடவுச்சீட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட இருவரிடம் பெற்றப்பட்ட தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவை மற்றும் மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

-Hiru News-









Post a Comment

0 Comments