பசு மாட்டு கோமியத்தில் கலந்திருக்கும் தங்கம் பற்றிய அபூர்வ தகவலை குஜராத் மாநில ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பசு மாட்டு கோமியத்தில் கலந்திருக்கும் தங்கம் பற்றிய அபூர்வ தகவலை குஜராத் மாநில ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
குஜராத்தின் ஜூனாகத் வேளாண்மை பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பசுவின் கோமியத்தில் இருக்கும் அபூர்வ வகை மூலப்பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து வந்தனர்.
இதற்காக, கிர் இனத்தை சேர்ந்த சுமார் 400 பசுக்களின் கோமியத்தை ஆய்வு செய்தததில், 1 லிட்டம் கோமியத்தில் 3 மி.கி முதல் 10 மி.கி வரை தங்கத்தின் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வு குழுவின் தலைவர் கோலக்கியா கூறுகையில், எருது, ஒட்டகம், ஆடு போன்றவற்றின் கோமியத்தை ஆய்வு செய்ததாகவும், ஆனால் பசுவின் கோமியத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சரியான வேதியியல் பகுப்பாய்வின் மூலம் பசு மாட்டு கோமியத்தில் கலந்திருக்கும் தங்கத்தை உலோகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தற்போது உருவாகியுள்ளது. பசுவின் கோமியத்தில் 5100 கலவைகள் இணைந்துள்ளன, இவற்றில் 388 கலவைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ மகிமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments