Subscribe Us

புத்தளம் மக்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் எம்மால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் - அலி சப்ரி


புத்தளம் மக்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் எம்மால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கட்சி பேதமின்றி செயற்பட நாம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதம அமைப்பாளரும்,தொழிலதிபருமான  அலி சப்ரி அப்துர் ரஹீம், சமூகத்தின் ஏனைய துறைகளில் உள்ளவர்களும் இந்த பணிக்கு தங்களது முழுமையான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லுாரி பெற்றோர் ஆசிரிய சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.

கல்லுாரியின் முதல்வர் அதிபர் முஹம்மத் .சிராஜூதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி.வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.ரீ.தாஹிர்,எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள்,மற்றும் துறைசார்ந்தவர்கள் என பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும் அமைப்பாளர் தமதுரையில் கூறியதாவது –

இன்று எமக்கு தேவைப்படுவது சிறந்த கல்விமான்கள்,கடந்த கால புத்தளம் வரலாற்றை பார்க்கும் போது அதனை உருவாக்க தேவையான சந்தர்ப்பங்கள் அரிதாக காணப்பட்டது.இன்று அந்த நிலை மாற்றமடைந்துள்ளதை இன்றைய சந்திப்பின் போது அவதானிக்க முடிகின்றது.

புத்தளத்தின் தேவைகளை பெற்றுக் கொள்ள நான் பிரதி நிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதீயுதீன் அவர்கள் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதி நிதியினை புத்தளத்துக்கு தந்துள்ளார்.அதனை கொண்டு இந்த கல்வி சவாலுக்கு நாம் தீர்வை பெற வேண்டும்.

கல்வி சவாலை எதிர் கொள்ளும் எமது ஊருக்கு எமது பாராளுமன்ற உறுப்பினரான நவவி அவர்களின் பங்களிப்பு காலத்தின் தேவையுணர்ந்தது.அவர் இதனை முன்னெடுத்து செல்வார் என்பது இந்த சபையோரின் எதிர்பார்ப்பாகும்.

ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லுாரி தற்போது இயங்கும் கட்டிடத்தில் இருந்து புதிய இடத்துக்கு அதனை மாற்ற பெருந்தொகையான பணம் தேவைப்படுகின்றது.அதனை பெரும் போராட்டத்தில் நாம் அனைவரும்,அது போல் கடல் கடந்து இருக்கும் எமது உறவுகளும் தமது உதவிகளை செய்வது காலத்தின் தேவையாகும் என்றும் அமைப்பாளர் அலி சப்ரி கூறினார்.

-Irshad Rahumadullah-

Post a Comment

0 Comments