யாழ்ப்பாணம், மயிலிட்டியை 12 ஆம் திகதிக்குள் விடுவிக்காவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் என கூறிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
யாழ் விஜயம் செய்த ஜனாதிபதி மயிலிட்டி, வலிவடக்கு மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் எந்தவொரு சாதக பதிலையும் வழங்காத நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் மகளின் பிறந்த நாளில் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.
இதில் ஜனாதிபதியுடன் இணைந்து கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது தான் போராட்டமா என வலிவடக்கு, மயிலிட்டு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
PHOTOS - TAMIL WIN
rajan vinasithamby



0 Comments