ஜோஜ் புஷ் மனிதனுக்கும ஜின்னுக்கும் பிறந்த குழந்தை இதனை ஏற்றுக் கொள்ளாத SLTJ யை விட்டு நான் விலகிக் கொள்கிறேன். – ஸதாத் சிலாபம்
எனது ஜமாஅத்தினுள் ஷைத்தான் நுழைந்து விட்டான் – ஆகவே அவனை விரட்டி விட்டோம்.
-------------------------- -------------------------- -------------------------- -------
“எனது ஜமாஅத்தினுள் ஷைத்தான் நுழைந்து விட்டான்” என்ற தலைப்பில் சிலாபம் ஸதாத் என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டும் தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள ஒரு செய்தி பரப்பப் பட்டு வருகின்றது.
SLTJ யை விட்டு ஒருவர் நீக்கப்பட்டால் அல்லது நீங்கியதாக அறிவித்துக் கொண்டால் ஏதோ அவர்கள் நேர்வழிக்கு வந்து விட்டதைப் போல் துள்ளிக் குதிக்கும் சில அநாமதேய சூனியக் கூட்டங்கள் இப்போது ஸதாத் என்பவரின் அறிவிப்புக்குப் பின் அதனையும் தூக்கிப் பிடித்துள்ளனர்.
நாளுக்கு நாள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியக் கொள்கையை ஏற்று ஏகத்துவத்தில் நுழையும் ஆயிரக் கணக்கான மக்களுக்கு மத்தியில் ஒருவன் அசத்தியத்திற்கு சென்று விட்டால் அதனை பெரு வெற்றியாக நினைக்கும் இந்த வழிகேடர்களை என்னவென்பது?
தன் மனைவியை துன்புறுத்தி, அடித்து, காயப்படுத்தி, செக்ஸ் படத்தை பார்த்துக் கொண்டே தன்னுடன் செக்ஸில் ஈடுபட வேண்டும் என வற்புறுத்தி அதற்கு மறுத்ததற்கு அடித்து துண்புறுத்திய அயோக்கியன் பாயிஸ் என்பவனை ஜமாஅத்தை விட்டும் நீக்கிய போது இவ்வாறு தான் இந்தக் கூட்டம் வால் பிடித்தது.
அதே போல் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பணம் எடுப்பதில்லை என்ற கொள்கையை கொண்டுள்ள ஜமாஅத்தில் இருந்து கொண்டு ஜமாஅத்திற்கு தெரியாமலேயே நிதி நிறுவனங்கள் மூலம் பணம் பெற்று 30 மாதங்கள் சம்பளமும் பெற்று வந்த ஹபிழ் ஸலபி என்வனை இந்த ஜமாஅத் நீக்கியது அப்போதும் இந்தக் கூட்டம் வால் பிடித்தது.
இப்படி எவனை நீக்கினாலும் அவர்கள் இந்த சூனியக் கூட்டத்திற்கு நேர்வழி பெற்றவர்களாக மாறி விடுவார்கள்.
இப்போது “இந்த ஜமாஅத்தில் ஷைத்தான் நுழைந்து விட்டதாக கூறியுள்ள ஸதாத் என்வனின் கொள்கை என்னவென்றே தெரியாமல் தான் இந்த சூனியக் கூட்டம் அவனுக்கும் வால் பிடிக்கிறது.
உண்மையில் ஸதாத் என்பவனின் கொள்கை என்ன?
SLTJ ஏன் அவனுடைய வெளியேற்றத்தை அலட்டிக் கொள்ள வில்லை. அப்படி அவன் என்ன ஆய்வு செய்து விட்டான் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட சிந்தித்தும் பார்க்காதவர்கள் தான் இப்போது ஸதாத் என்பவன் நேர் வழி பெற்றதாக கூறித் திரிகிறார்கள்.
ஜின்கள் ஷைத்தான்களுக்கு உள்ள ஆற்றல் பற்றி நான் ஆய்வு செய்துள்ளேன் அதனை ஜமாஅத் உலமாக்கள் பார்த்து முடிவு சொல்லுங்கள் என்று ஜமாஅத்திற்கு ஸதாத் என்பவர் அறிவித்தார். அதன் படி உங்கள் ஆய்வை ஜமாஅத்திற்கு சமர்ப்பிய்யுங்கள் என்று ஜமாஅத்தும் இவறுக்கு சந்தர்ப்பம் கொடுத்தது.
ஆய்வின் (?) முடிவை ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு வந்து வீடியோ பதிவாக செய்து கொடுத்தார் ஆய்வுப் புலி.
ஆய்வைப் பார்த்த ஜமாஅத் உலமாக்கள் சிரிப்பதா அழுவதா என்று தெறியாத அளவுக்கு இவரின் ஆய்வு லட்சனமாக இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்று இவர் நேர்வழிக்கு வந்து விட்டாராம்… சூனியக் கூட்டம் துள்ளிக் குதிக்கிறது.
இவர் அது மட்டுமா சொல்கிறார்…
========================== ====
ஜின்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரிவார்கள்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் ஜின்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள்.
அமெரிக்காவும், ரஷ்யாவும் ஜின்களுடன் கொம்பியூட்டர் பாதையில் பேசி வருகிறார்கள்.
ஒரு முறை அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டு செல்லும் போது ஜின்களும் அமெரிக்க ராணுவத்தை திருப்பி தாக்கினார்கள்.
திருப்பித் தாக்கிய ஜின்களுடன் அமெரிக்கா ஒரு சமாதான ஒப்பந்தம் செய்தது.
அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் ஜின்கள் கேட்டுக் கொண்டன அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள வில்லையாம்.
காரணம், ஒப்பந்தத்திற்கு வந்த ஜின்கள் வாக்கு மீறுபவர்கள் என்று வேறு ஒரு ஜின் கூட்டம் சொல்லிக் கொடுத்ததாம்.
இது மட்டுமா? இவரின் ஆய்வு (?)
-------------------------- -------------------------- -------------
ஒரு பெண் ஜின் மனித ஆணுடன் உடலுறவு கொள்ளுமாம்.
ஒரு ஆண் ஜின் மணித பெண்ணுடன் உடலுறவு கொள்ளுமாம்.
கணவன் மனைவி இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் பெண் ஜின் கணவனை மேலே தூக்கியெடுத்து அவனுடன் உடலுறவு கொள்ளுமாம், இதனை அந்த கணவனும் உணர்வானாம்.
இதே போல் தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியிடம் வரும் ஆண் ஜின் மனைவியை மேலே தூக்கி அவளுடன் உடலுறவு கொள்ளுமாம். அதனை அந்த மனைவியும் உணர்வாளாம்.
இச்சை நீர் வெளியாகியதைக் கூட உணர முடியுமாம். (ஆய்வு, ஆய்வு, ஆய்வு)
இது மட்டுமா? இவரின் ஆய்வு (?)
-------------------------- -------------------------- -------------
ஜோஜ் புஷ் (முன்னால் அமெரிக்க ஜனாதிபதி) ஜின்னுக்கும் மனிதனுக்கும் பிறந்த பிள்ளையாம்.
ஜின்னும் ஜோஜ் புஷ்ஷின் தாயும் சேர்ந்து உடலுறவு கொண்டதின் மூலம் தான் ஜோஜ் புஷ் பிறந்தாராம்.
ஜோஜ் புஷ்ஷின் கண்கள் நீல நிறமாக இருப்பது தான் இதற்கு ஆதாரமாம். (ஆய்வு, ஆய்வு, ஆய்வு)
இது மட்டுமா? இவரின் ஆய்வு (?)
-------------------------- -------------------------- -------------
ஹிட்லரும், நாஜி படைகளும் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்களாம்.
நாஜி படைகளும் ஹிட்லரும் பூமியில் ஓரிடத்தில் இருக்கும் ஒரு ஓட்டை வழியாக வேறு ஒரு உலகத்திற்கு சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.
(ஆய்வு, ஆய்வு, ஆய்வு)
இது மட்டுமா? இவரின் ஆய்வு (?)
-------------------------- -------------------------- -------------
தனது காலில் 03 அல்லது 04 வருடங்களாக ஒரு புன் இருக்கிறதாம். அந்தப் புன் லேசாகவில்லையாம்.
அது புன்னாக இருந்தால் லேசாகியிருக்குமாம். அது புன்னில்லையாம் ஜின்னாம்.
அதனால் தான் அந்தப் புன் லேசாக வில்லையாம்.
(ஆய்வு, ஆய்வு, ஆய்வு)
இது ஸதாத் என்வரின் ஆய்வின் ஒரு பகுதி மட்டும் தான் இன்னும் உள்ளவைகளை தொடர்ந்தும் நாம் தெளிவு படுத்துவோம்.
இப்படிப் பட்ட ஒருவரின் ஆய்வை (?) தான் SLTJ உலமாக்கள் ஏற்றுக் கொள்ள வில்லையாம். அதனால் இவர் SLTJ யை விட்டும் விலகிக் கொள்கிறாராம்.
இவறுடைய இந்த அற்புத ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் SLTJ க்குள் ஷைத்தான் நுழைந்து விட்டதாம். இது போன்ற கட்டுக் கதைகளையும், ஹொலிவூட்டை மிஞ்சும் சினிமா படக் கதைகளையும் தான் இவர் ஆய்வு என்று சமர்ப்பித்தார் SLTJ யிடம்.
இந்த ஜமாஅத்திற்குள் நுழைந்த ஷைத்தான் எதுவென்று இப்போது தெரிகின்றதா?
இவர் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்கிறாராம் அதனால் நேர்வழி பெற்று விட்டாராம்.
தன் காலில் இருப்பது புன்னல்ல ஜின் என்பவன் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்று நம்பமாட்டானா என்ன?
ஜோஷ் புஷ் ஜின்னுக்குப் பிறந்த பிள்ளை என்பவன் சூனியத்தை நம்புவது ஆச்சரியமான ஒன்றா?
இந்த ஜமாஅத்திற்குள் நுழைந்த ஷைத்தானை அல்லாஹ் வெளியேற்றி விட்டான்.
இனி ஒரு ஹொலிவூட் படத்தை இவர் தயாரிக்கலாம்.


0 Comments