சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம் (RCC) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தேசிய சூரா சபை, இலங்கை முஸ்லிம் கன்ஸில், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த நிலையத்தை உருவாக்கியுள்ளன.
அதற்கமைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்கள் மற்றும் அவர்களது தற்போதய வதிவிடம் தொடர்பான அடிப்படை தகவல்களை திரட்டி, அத் தகவல்களை உரிய அரச அதிகாரிகளிடம் சமர்பிக்க RCC நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்காக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் RCC யின் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை 2016/05/22 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் மையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு RCC வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு : 0766229733 அல்லது 0117490415 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்
உத்தியோகபூர்வ முகநூல் குழுமம் : https://www.facebook.com/groups/493808774157374/


0 Comments