கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு தொடர்ந்தும் படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாகலகம்வீதியின் நீர் மட்டக் கணிப்பின்படி இன்று காலை 6 மணியளவில் நீர் மட்டம் 6அடியாக காணப்பட்டதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக கொலன்னாவை மற்றும் கடுவல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளன.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக 2,43,898 பேர் பாதிக்கப்பட்டு 431 பாதுகாப்பான இடங்களில் தங்கவைகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது


0 Comments