Subscribe Us

header ads

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்த்ராவின் மறுபக்கம்



நல்லாட்சி என்ற சாம்பார் ஆட்சி பதவிக்கு வந்த உடன் ரனில் செய்த முதல் வேல. மத்திய வங்கி ஆளுனராக அர்ஜுன் மஹேந்ராவை நியமித்ததே. இவர் யார்? இவருடைய வரலாறுகள் என்ன என்பதை விட அவர் இப்போது செய்யும் சில வேலைகள் சமூக செயல்பாட்டாளர்களின் கடும் விமரிசனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

(1) ஆளுனராக நியமிக்கப்பட்ட இந்த கொஞ்ச காலத்தினுல் அரச செலவில் (மத்திய வங்கியின் செலவில்) 31 முறை வெளினாட்டு சுற்றுப் பயணங்கள் சென்றுள்ளார். 

அதன் போது ஒருமுறை அவர் இரண்டு மில்லியன் ரூபாய்களுக்கு மேலங்கி (கோட்) மட்டும் கொள்வனவு செய்துள்ளார். ஒரு நேர உணவுக்காக மட்டும் ஒரு முறை நாலு லட்சத்து எழுபத்தோராயிரம் ரூபாய்கள் செலவு செய்துள்ளார்.

அதிகமான தடவைகள் சிங்கப்பூருக்கே பயணித்துள்ளார்.இவர் இலங்கையில் இருந்த நாற்களை விடவும் சிங்கப்பூரில் தங்கி இருந்த நாற்களே அதிகம் என செய்திகள் கூறுகின்றன. 

இவருக்கான உத்தியோகபூர்வ வாஸஸ்தலம்.. (குட்டி மாளிகை) பௌத்தாலோக மாவத்தையில் அமைந்திருக்கிறது.. 

அதி சொகுசு வாய்ந்த இந்த அழுக்காக இருப்பதாக கூறி மத்திய வங்கியின் கணக்கில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் தங்கி உள்ளார்.

இவர் செய்த மிகப் பெரும் துரோகச் செயலாக.. வங்கி முறி கொடுக்கல் வாங்கலில் தனது மருமகனுக்காக ஈ டீ எப் நிதியை பயன்படுத்தியமை நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.

இவரது பதவி காலம் இந்த ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டி இருப்பினும் ரனில் இவரை தொடர்ந்தும் வைத்திருக்கவே விரும்புகிறார். 

அவாறு இவரது பதவி காலம் நீடிக்கப்பட்டால் இன்னுமாறு வருடங்கள் அவர் பதவியில் இருக்கலாம் என்று தெரிகிறது. 

சிறிது நாற்களுக்கு முண்ணால். ரனில் விக்ரமசிங்கவின் சுய விருப்பத்தின் பேரில் ஒரு நடிகைக்கு சொந்தமான கட்டிடமொன்றை மாத வாடைகையாக பல கோடி ரூபாய்களுக்கு எடுத்துள்ளமை பலராலும் கடும் விமரிசனத்துக்கு உள்ளகி வருகிறது. 

இவ்வாறு 22.05.2016 ''ராவய"" பத்திரிகையின் 8 ஆம் பக்கத்தில் பேராசிரியர் சரத் விஜேசூரிய அவர்கள் எழுதியுள்ள நீண்ட கட்டுரையில் விபரமாக குறிப்ப்டப்பட்டுள்ளது.இவ்வாறு எங்கு சுற்றியும் ரனில் விக்ரமசிங்கவின் திருகு தாளங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன...

-Haja Sahabdeen-

Post a Comment

0 Comments