Subscribe Us

சிறுகடன் என்ற பெயரில் முஸ்லிம் ஊர்களில் வேலிபாயும் கயவர்கள் #MicroFinance


சிறுகடனுதவி திட்டம் என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் கிளைகளை ஆரம்பித்துள்ள குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டும் சிறுகடனுதவிகை வழங்கி அவர்களை வட்டிக்குள் தள்ளிவிடும் கலாச்சாரம் முஸ்லிம் ஊர்களிலும் இப்பொழு வியாபித்துள்ளது. இது குறித்து பலரும் பலவிடயங்களில் தொடர்பில் பேசியிருந்தாலும் இவை குறித்த சரியான தீர்வை ஒருவரும் முன்வைக்கவில்லை என்பது கவலைக்குரியது.

இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கிமுறைமை, பைத்துல் மால் என்பவற்றை பள்ளிவாசல்களில் நிறுவ தனவந்தர்கள் முன்வரவேண்டும். இது ஒருபுறமிருக்கு அண்மையில் மட்டக்களப்பில் பல தற்கொலைகளுக்கு இந்த சிறுகடன் திட்டமே காரணமென புலனாய்வு வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. சிறுகடன் வழங்க வரும் இளம் உத்தியோகத்தர்கள் செய்யும் பாலியல் சேட்டைகளும் காரணமென அறிக்கைகள் மூலம் அறியக்கிடைக்கிறது.

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் ஊர்களிலும் இந்த கடன்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்படுகிறது, வீடுகளுக்கு வரும் உத்தியோகத்தர்கள் வேலிபாயும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் இவை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் புகைப்படங்களாக பதிவிடப்பட்டுள்ளது கேவலமான கவலைக்குரிய விடயங்களாகும். 

இதனை பள்ளிவாசல் நிருவாகம் முன்வந்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Post a Comment

0 Comments