Subscribe Us

மைதானத்தில் விக்கெட் கீப்பரை கொலை செய்த பேட்ஸ்மேன்!


விக்கெட் கீப்பரை ஸ்டம்பினால் தாக்கி கொலை செய்த பேட்ஸ்மேனை பங்களாதேஷ் போலீஸார் தேடிவருகின்றனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். பதினாறு வயது நிரம்பிய பாபுல் ஷிக்தார் என்ற வாலிபர் விக்கெட் காப்பாளராக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, பேட்ஸ்மேன் அவுட்டானார். ஆனால், அது நோபால் என நடுவர் கூறியதால் பேட்ஸ்மேன் தொடர்ந்து ஆடினார். அடுத்த பந்திலும் அதே பேட்ஸ்மேன் அவுட் ஆனார். அப்போதும் அது நோபால் என நடுவர் கூறியதையடுத்து, நடுவர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தீர்ப்பு சொல்கிறார் என்று ஷிக்தார் குற்றஞ்சாட்டினார்.
இதனால் கோபமுற்ற பேட்ஸ்மேன், அங்கு குத்தப்பட்டிருந்த ஸ்டம்ப்பை உருவி, ஷிக்தாரின் பின் தலையில் பலமாகத் தாக்கினார். இதனால் களத்தில் சுருண்டு விழுந்தார் ஷிக்தார். திகைத்துப்போன குழுவினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். என்றபோதும் செல்லும் வழியிலேயே ஷிக்தரின் உயிர் பிரிந்தது. இதற்கிடையில், ஷிக்தர் படுகாயமடைந்ததைக் கண்டு பயந்த பேட்ஸ்மேன் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். தற்போது போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments