கிராபிக்ஸ் டிசைன் (Graphic Designing) வடிவமைப்புத் துறையை தொழிலாக மேற்கொள்ளக் கூடியவாறு தொழில் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட Graphic Designer Training Program கற்கை நெறியின் முதலாம் தொகுதி வகுப்புக்கள் நிறைவடைந்தன. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கு.
கிராபிக்ஸ் டிசைன் துறையில் சுமார் 20 வருட கால தொழில் அனுபவமும் கற்பித்தல் அனுபவமும் கொண்ட சகோ. ஹிஷாம் ஹுஸைன் இப் பாடத் திட்டத்தை வடிவமைத்தார். கிராபிக்ஸ் டிசைனை தொழிலாக செய்யும் ஒருவர் அறிந்துவைத்திருக்க வேண்டிய அனைத்துப் பகுதிகளையும் இப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கினார்.
இக் கற்கைநெறியைப் பயிலுவோர் அச்சு (Print)க்கு வடிவமைக்கும் முறையையும் வலைத் தளம் (Web page)க்கு வடிவமைக்கும் முறையையும் கற்றுக்கொண்டார்கள்.
அந்த வகையில் Adobe Photoshop, Illustrator, InDesign ஆகிய Graphic Designing Software கள் கற்பிக்கப்பட்டதுடன், வடிவமைப்பு (design) ஒன்றில் அவசியம் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களான Design elements, Gastalt principles, Color theory and psychology ஆகியனவும் கற்பிக்கப்பட்டது.
புத்தகங்களைக் கட்டும் (Book Binding) வித்தியாசமான முறைமைகள் செயன்முறை மூலம் விளக்கப்பட்டது.
வர்ணங்கள் தொடர்பான பாடப் பகுதியை எம்.ஜே.எம். மிஹ்லார் (BFA) Hons. - நுண்கலை கௌரவப் பட்டதாரி- கற்பித்தார்.
கடதாசிகளின் வகைகள், ஓப்செட் அச்சுப் பதித்தல் தொடர்பாக இக் கற்கையைப் பயிலும் சகோ. அப்துல் அஸ்ஸாம் (Globelink Offset Press) இரண்டு வகுப்புக்களில் கற்பித்தார்.
இவற்றுடன், இணையத்தின் ஊடாக வடிவமைப்புத் தொழில்களைப் பெற்றுக்கொள்ளும் வலைத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவை மட்டுமல்லாமல், எதிர்வரும் 07ஆம் திகதி சனிக்கிழமை இக் கற்கையைப் பயிலும் சகோ. எம்.என்.எம். பர்ஹான் ஒளிப்படப்பிடிப்பு (Photography) தொடர்பாகவும், அடுத்த வாரம் எச். ஹுஸ்னுன் நஸீல் (BSBM, DipM ACIM) தொழில்முனைவும் சந்தைப்படுத்தலும் (Entrepreneurship and Marketing) பற்றியும் சிறப்புப் பாடங்களை நடத்தவுள்ளனர். இப் பாடங்களை சகோ. ஹிஷாம் ஹுஸைன் நெறிபடுத்துவார். இன்ஷாஅல்லாஹ்.
இவ்வாறாக, கிராபிக்ஸ் டிசைன் வடிவமைப்புத் துறையில் நிறைவானதொரு கற்கையும் செயன்முறைப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இவை அனைத்துக்கும் மேலாக TVEC பதிவுடன் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
Graphic Designer Training Program கற்கை நெறிக்கான இரண்டாம் தொகுதி (Second Batch) மாணவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை முதல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
Graphics Designer ஆக சுய தொழில் செய்ய விரும்புவோரும் அச்சகம் ஒன்றில் அல்லது பத்திரிகை வெளியீட்டுப் பணியகமொன்றில் அல்லது வெப் தளங்களை உருவாக்கும் நிறுவனமொன்றில் டிசைனராக வேலையில் சேர்ந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு வகுப்புக்கு 10 – 12 மாணவர்கள் வரை மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதை தயவுசெய்து கவனத்தில்கொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு :(+94 77 355 5540)
ISOFT PUTTALAM
College of ICT Education, Puttalam, Sri Lanka.
NO: 42, Nedunkulam Road, Puttalam., Puttalam
ISOFT PUTTALAM
College of ICT Education, Puttalam, Sri Lanka.
NO: 42, Nedunkulam Road, Puttalam., Puttalam







0 Comments