Subscribe Us

header ads

கடைகளுக்கு மஹரகம பொலிஸார் விசேட அறிவித்தல்


மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரவு நேரக் கடைகளுக்கு மஹரகம பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

இந்தப் பிரதேசங்களில் நடாத்தப்படும் இரவு நேரக் கடைகள் யாவும் நள்ளிரவு 1.00 மணி முதல் மூடப்பட வேண்டும் என மஹரகம பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு நடவடிக்கையொன்றின் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரக் கடைகளில் கூடும் பெரும்பாலான நபர்கள்தான் சமூக விரோத குற்றச் செயல்களில் தொடர்புபடுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனாலேயே, இந்த தீர்மானம் எடுக்கபட வேண்டி ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இரவு நேரக் கடை உரிமையாளர்கள் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரவு நேரக் கடைகளில் பணியாற்றுவோருக்கு கூடிய சம்பளம் கொடுக்கப்படுகின்றது. இதனை ஊழியர்கள் இழக்க நேரிடுகின்றது. தூரப் பயணங்களில் ஈடுபடும் பயணிகள் இதனால் பாதிக்கப்படப் போகின்றார்கள் எனவும் கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments