நாட்டின் எட்டு மாகாணங்களில், 19 மாவட்டங்களில் பல நாட்களாக தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண காலநிலையினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 120 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று (18) மாலை வரையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் படி இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மோஷமான காலநிலையினால் 25 பேர் இந்த காயமடைந்துள்ளதாக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
80 ஆயிரத்து 924 குடும்பங்கள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களின் தனிநபர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 374 பேர் ஆகும்.
இடம்பெயர்ந்துள்ள 48 ஆயிரத்து 998 குடும்பங்களின் 2 லட்சத்து 23 ஆயிரத்து 687 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனர்த்தங்களினால், 229 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 2647 வீடுகள் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் நிலையம் மேலும் கூறியுள்ளது.
இந்த எட்டு மாகாணங்களிலும் மேல் மாகாணத்திலுள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் 56 ஆயிரத்து 209 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 53 ஆயிரத்து 439 பேர் காணப்படுவதாகவும் நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


0 Comments