உடல் எடை அதிகமானவர்கள் உடல் சோர்வாக இருப்பதாக உணர்வார்கள். உடல் எடை குறைந்தவர்கள் செய்கின்ற சில வேலைகளை உடல் எடை அதிகமானவர்கள் செய்ய மிக சிரமப்படுவார்கள்.
சிலர் படிகளில் ஏறக்கூட சிரமப்படுவார்கள். இவ்வாறு இருப்பவர்கள் தாம் சோர்வாக இருப்பதாக உணர்வார்கள்.
ஒருவர் நோர்மலாகவோ அல்லது சோர்வாகவாகவோ இருக்கிறார் என்பது குறித்து தமிழக டாக்டர் நியூட்ரீஸியனிஸ்ட்டான ஸ்ரீமதி வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
1. பருமனாக இருக்கின்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் உணவைக் குறைத்துக் கொள்ளக் கூடாது.
அதனால் உடல் வளர்சியில் மாற்றம் ஏற்பட்டு மேலும் பருமனாவார்கள். மேலும் இவர்கள் போதுமான அளவு, தகுந்த இடைவெளியில் உணவு உண்பது முக்கியம்.
2. பிட்டாக இருப்பதற்கு முதல் விடயம் தண்ணீர். விற்றமின்கள் தண்ணீரிலிருந்து தான் நமக்கு கிடைக்கின்றது.
ஆனால் எல்லோரும் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும் என்று கூறுவது தவறு.
ஒவ்வொருவருக்கும் இந்த அளவு மாறுபடும்.உங்களுடைய சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் போதவில்லை என அர்த்தம். அதனால் உங்கள் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரை அருந்துங்கள்.
3. எப்போது உடல் உழைக்கத் தொடங்குகிறதோ அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக, பிட்டாக இருப்பீர்கள்.
தினமும் கண்டிப்பாக அரைமணி நேரம் நடக்க வேண்டும். அதுவும் அதிகாலை வெயிலில் நடந்தால் உங்களுக்கு விற்றமின் - டி கிடைக்கும். நமது உடலில் கல்சியம் சேர்வதற்கு இந்த விற்றமின் டி மிகவும் தேவை.
வெயிலில் அதிக நேரம் இல்லாமல் இருப்பதால் தான் பலருக்கு இன்று விற்றமின் -டி பிரச்சினை வருகிறது.
அதனால் மூட்டு வலி, முதுகு வலி ஏற்படுகிறது. பத்து நாள் தொடர்ந்து நடைபயிற்சி செய்தால் படிக்கட்டில் ஏறும்போது மூச்சு வாங்குவது நின்று விடும்.
4. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறீர்கள் என்றால் இன்னும் பிரச்சினை தான். நீங்கள் என்னதான் மெலிவாக இருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் தொப்பை போடுவது சகஜமான ஒன்றாகி விட்டது.
இரண்டு மணி நேர இடைவெளியிலாவது எழுந்து மாடிப்படி ஏறி இறங்குவது, ஐந்து நிமிடம் நடப்பது என கொஞ்சமாவது உடலுக்கு வேலை கொடுங்கள்.
இல்லையென்றால் தசைகள் வேலை செய்யாமல் அடிக்கடி மரத்துப் போவது, எலும்புகளில் வலி போன்றவை ஏற்படத் தொடங்கும்.
என்னதான் நீங்கள் வேலை செய்யாமல், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தாலும் உடல் வலிப்பதற்கு நீங்கள் உடலுக்கு வேலை கொடுக்காததுதான் காரணம்.
5. மாலை நேரம் ஆனதும் உடல் மிகவும் சோர்வடைகிறது என்றால் பெண்களுக்கு இரத்தச் சோகை பிரச்சினை இருக்கக்கூடும்.
உங்களது இரத்தத்தில் ஈமோகுளோபினின் அளவைப் பரிசோதனை செய்து பாருங்கள். ஆண்கள் சீனியின் அளவைப் பரிசோதனை செய்வது நல்லது.
6. பிட்டாக இருப்பதற்கு கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டும். உணவில் கொழுப்பு சேர்க்கக் கூடாது என எதையும் ஒதுக்கக்கூடாது.
புரோட் டீன், விற்ற மின், கார்போஹைட்ரேட் என அனைத்தும் சேர்ந்த சமச்சீரான உணவை உண்பது,புரோட்டீன், விற்றமின், கார்போஹைட்ரேட், என அனைத்தும் சேர்ந்த சமச்சீரான உணவை உண்பது, சீரான உடல் உழைப்பு, மூச்சுப்பயிற்சி, தேவையான தூக்கம் இருந்தால் நீங்க பருமனாக இருந்தாலும் சரி, மெலிவாக இருந்தாலும் சரி பிட்டாக உணர்வீர்கள்.


0 Comments