Subscribe Us

header ads

15 கைவிரல்கள், 16 கால்விரல்களுடன் பிறந்த குழந்தை (படங்கள்)


சீனாவில் குழந்­தை­யொன்று 15 கைவி­ரல்­க­ளையும் 17 கால் விரல்­க­ளையும் கொண்­டுள்­ளது. இக்­ கு­ழந்­தையின் பெற்றோர் சீனாவின் தென் பிராந்­தி­யத்­தி­லுள்ள குவாங்டோங் மாகா­ணத்தின் ஸெஷன்ஸென் நகரில் தொழில்­பு­ரி­ப­வர்கள். இவர்கள் மத்­திய பிராந்­தி­யத்­தி­லுள்ள ஹுனான் மாகா­ணத்தின் ஸோங்பிங் எனும் கிரா­மத்­தி­லி­ருந்து வந்­த­வர்­களார். 

3 மாத வய­தான இந்த ஆண் குழந்­தையின் இடது கையில் 8 விரல்­களும் வலது கையில் 7 விரல்­களும் காணப்­ப­டு­கின்­றன. ஆனால், இரு கைகளிலும்­ பெரு விரல் இல்லை. ஹொங்கொங் என இக் ­கு­ழந்தை அழைக்­கப்­ப­டு­கி­றது.

இக்­ கு­ழந்­தையின் தாயா­ருக்கும் கை, கால்­களில் மேல­தி­க­மாக தலா ஒரு விரல் காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இக் ­கு­ழந்­தையின் தந்­தை­யான ஸோ சென்ங்லின் இது தொடர்­பாக கூறு­கையில், “எனது மனை­விக்கு கைக­ளிலும், கால்­க­ளிலும் மேல­தி­க­மாக தலா ஒரு விரல் உள்­ளது.



எனவே இந்­ நிலை மர­பியல் ரீதி­யாக எமது குழந்­தை­யையும் பாதிக்கும் என நாம் கவ­லை­கொண்­டி­ருந்தோம்.  இதனால், கர்ப்ப காலத்தில் ஷென்ஸென் நக­ரி­லுள்ள 3 பெரிய வைத்­தி­ய­சா­லை­களில் ஸ்கேன் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டோம்.

எனினும், மருத்­து­வர்கள் குறை­பாடு எதையும் கண்­ட­றி­ய­வில்லை. எனவே, எமது குழந்தை 15 கை வி­ரல்­க­ளு­டனும் 16 கால் ­வி­ரல்­க­ளு­டனும் பிறந்­தமை எமக்கு அதிர்ச்­சி­யா­க­வுள்­ளது” எனத் தெரி­வித்­துள்ளார்.


இக்­ கு­ழந்­தையின் மேல­திக விரல்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அகற்­று­வ­தற்கு 1.1 கோடி ரூபா வரை செல­வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந் நிதியை திரட்டுவதற்கு உள்ளூர் நலநிதியங்களின் உதவியை நாடுவதற்கு இக் குழந்தை யின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர். 




Post a Comment

0 Comments