Subscribe Us

header ads

அன்புள்ள முபாரக் மஜீத் அவர்களுக்கு, ஆயு போவன்,


மாநகர போக்குவரத்து நெரிசலுக்குள் எங்கிருந்தோ வந்த எருமை மாட்டுக் கூட்டம் புகுந்தது போல நீங்களும் இன்னும் நான்கைந்து பேர் (உம் மே ) கூட்டத்தை நடாத்திய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணங்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் இஷ்டத்திற்கு சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன..இந்த வரலாறோ சமூகக் கல்வியோ காணாத கூட்டத்தின் அரிய புகைப்படங்களை பலர் ஸ்டேடஸ்களாகப் போட்டு உங்களின் அரசியல் இருப்புக்கே கரும்புள்ளி ,செம்புள்ளி குத்த நினைக்கின்றனர்..இந்த பரந்த விரிந்த உலகில் நீங்கள் மட்டும் இப்படி எடுப்பார் கைப்பிள்ளை போல மதிக்கப்பட காரணம் என்ன ?

"புவனா ஒரு கேள்விக் குறி " போல என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு அதிசய பிறவி.. உங்கள் அரசியலின் ஆழ அகலங்கள்,நியாய தர்மங்கள், எனக்குப் புரியவில்லை..ஏதோ கட்சி நடத்துகிறீர்கள்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாளொரு ஆட்களை ப்ளொக் பண்ணுவதும் பொழுதொரு மகிந்தவின் துதிபாடலுமாய் கன ஜோராய் இருந்தீர்கள்.மகிந்த தோற்று உங்கள் ஆஸ்தான நாயகன் பொதுமக்கள் பணத்தில் ஒரு சதமும் மோசடி செய்யாத பசில் கைது செய்யப்பட்ட போது அடிபட்ட சிறுத்தையாய் சீறி எழுந்தீர்கள்...இடையில் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் கட்சியின் உயர் பீட உறுப்பினர் என்று சொல்லிக் கொண்டு " டேய் நானும் ரவுடி தான் " கணக்காய் வலம் வருகிறீர்கள்.திடீர் என்று அரசியல் அசூசிகளின் தலை நகரமான அஸ்வர் மாமாவை அழைத்துக் கொண்டு போய் மகிந்தவிற்கு பாவாடை போர்த்தி ஸொரி பன்னாடை, இல்லப்பா.. பொன்னாடை போர்த்தி அதை போஸ்டாய் வேறு போட்டு ரணகளப்படுத்துகிறீர்கள்..

நான்கு நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி காலியில் அவரது கட்சி ஆட்களுடன் நடந்த சந்திப்பு ஒன்றில் ஏதோ இஸ்ரேலின் மொசாட் உளவாளி கணக்காய் சிவப்புத் தொப்பியுடன் போய் இருந்தீர்கள்...இன்று வேறு ஏதாவது கட்சித் தலைவர் ஒருவர் இப்படி மாறி மாறி மகிந்த , மைத்திரி ரிசாத் என்று போய் மாமன், மச்சான் உறவு கொண்டாடி தில்லாலங்கடி வேலை செய்தால் பத்திரிகைகள் பரபரப்பாய் அலறி இருக்கும்..இதப்பாருடா என்று ஆசிரியர் தலையங்கங்கள் சூடு பறந்திருக்கும்...ஆனால் தனி ஒருவராய் இருந்து இப்போது 4 பேரைச் சேர்த்துக் கொண்டுள்ள உங்கள் கட்சியின் 300 வீத வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஊடகங்களுக்கே கடும் ஜூரம் வந்துவிட்டது..

உண்மையில் நீங்க யாரு ? உங்க பின்னணி என்ன ? பாம்பேல என்ன பண்ணிட்டு .. ஸொரி ..

விமானங்களும் கப்பல்களும் காணாமல் போகும் பேர்முடா முக்கோணம் போல் மர்மங்களின் ஒட்டு மொத்த தொகுப்பாய் முரண்பாடுகளின் சக்கரவர்த்தியாய் இருக்கிறீர்கள்..உங்களுக்கே புரியாத உங்கள் அரசியல் கொள்கைகளை தற்கால விடலைப் பயல்கள் ஏதோ வடிவேல் ஜோக் போல கொண்டாடித் தீர்த்து வருகின்றன....

இந்த தேசத்தில் ஊழலையும் கொசுவையும் ஒழிக்க முடியாது போன்று ஃபேஸ்புக்கில் நீங்கள் கலாய்க்கப்படுவதையும் தடுக்க முடியாது போல் இருக்கிறது....

இப்படிக்கு
உங்கள் அரசியல் காமெடிப் படங்களை முதல் நாள் முதல் சோ பார்த்து மகிழும்..
அதி தீவிர ரசிகன்.........
-Zafar Ahamed-

Post a Comment

0 Comments