Subscribe Us

நூற்றாண்டை கடந்த நிலையில் மத்திய கிழக்கில் கொந்தளிப்போடு ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஆறு


லத்தீப் பாரூக் –
19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் பிரிட்டிஷ் பேரரசு முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கு உருக்குலைய வேண்டும் என்று முடிவு கட்டியது. இதே காலப்பகுதியில் தான் சியோனிஸ யூதர்களும் பலஸ்தீனத்தில் தமது தனி இராஜ்ஜியத்தை நிறுவ திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தனர். அந்த காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் 97 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய அரபு பலஸ்தீனர்களாகவே காணப்பட்டனர்.
07-24-ocha-gazaபலஸ்தீனர்களை கொன்று குவித்தும் அவர்களை அங்கிருந்து துரத்தி அடித்தும், உலகம் முழுவதும் சிதறிக் கிடந்த, பலஸ்தீன பூமியை அதுவரை கண்டும் கூட இராத யூதர்களைக் கொண்டு வந்து பலஸ்தீன பூமியில் குடியேற வைப்பது தான் இந்தத் திட்டம். இதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக இன்றும் அகதி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
அந்தக் காலப்பகுதி மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதி துருக்கிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலப்பகுதியாகும். முஸ்லிம் விரோத சக்திகளுக்கு பெரும் தடையாக இருந்தது இதுதான். அதை நீக்குவதே அவர்களின் பிரதான குறிக்கோள். முதலாவது உலகப் போரில் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டியது. பிரிட்டிஷ் மற்றும் பிரன்ஸ் என்பனவற்றின் கூட்டுப் படைகளால் துருக்கிப் பேரரசு தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அந்த வாய்ப்பை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.
துருக்கி பேரரசின் வீழ்ச்சியை எதிர்ப்பார்த்து காத்திருந்த பிரிட்டிஷ், பிரான்ஸ் படைகள் 1915 நவம்பர் 23 முதல் இரகசிய பேச்சுவார்த்தகளைத் தொடங்கின. இதன் மூலம் அவர்கள் இந்தப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்தப் பேச்சுவார்ததைகளின் முடிவில் உருவானது தான் ளுலமநள – Piஉழவ உடன்படிக்கை. (மத்திய கிழக்கை தமக்கிடையில் கூறுபோடும் இரகசிய பேச்சுக்களில் பிரிட்டிஷ் தரப்பில் தலைமை தாங்கியவர் ஆயசம ளுலமநள என்ற சிரேஷ்ட ராஜதந்திரி பிரான்ஸ் சார்பாக இதற்கு தலைமை தாங்கியவர் அந்த நாட்டின் முக்கிய ராஜதந்திரி குசயnçழளை புநழசபநள-Piஉழவ என்பவர். இவர்கள் இருவரதும் பெயர் கொண்டு தான் இந்த உடன்படிக்கை அழைக்கப்படுகின்றது) ரஷ்யா இதில் இருந்து விலகி இருந்தாலும் பின்னர் பிரிட்டனும் பிரான்ஸ{ம் ரஷ்யாவையும் இணைத்துக் கொண்டு அதன் சம்மதத்திலேயே இந்த உடன்படிக்கையை செய்து கொண்டன.
இன்றும் கூட மத்திய கிழக்கில் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு பிரதான காரணமாக அமைந்த இந்த உடன்படிக்கை தான் வரலாற்றில் மிக மோசமான சதித் திட்டமாகும். இந்த உடன்படிக்கை பிரகாரம் யுத்தத்துக்குப் பின் பிரிட்டனும் பிரான்ஸ{ம் மத்திய கிழக்கை கூறு போட்டு அவற்றுக்கு தேவையான விதத்தில் எல்லைகளை வகுத்து புதிய நாடுகளை உருவாக்கின. இன்று வரை அனுபவித்து வரும் இன்னல்களுக்கும் இந்தப் பிhந்தியம் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்தது இந்தப் பிரிவினைதான்.
இந்த சதிகார உடன்படிக்கை படி மத்தியதரை பிரதேசத்தில் உள்ள பலஸ்தீனம், ஜோர்தான், பக்தாத், பாரசீக வளைகுடாவைச் சூழவுள்ள பிரதேசம் என்பன பிரிட்டனால் பறிக்கப்பட்டன. சிரியா,லெபனான்,துருக்கியின் சிலிசியா பகுதி என்பன பிரான்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. பின்னர் எகிப்து பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழும் வட ஆபிரிக்க நாடுகளான லிபியா, மொரோக்கோ, துனிஷியா, அல்ஜீரியா, மொரிடானியா என்பன பிரன்ஸின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வரப்பட்டன.
உண்மையில் பிரிட்டனுக்கோ அல்லது பிரான்ஸுக்கோ இந்த நாடுகள் மீது எந்ந விதமான உரிமைகளும் இருக்கவில்லை. லண்டனிலும் பிரான்ஸிலும் இருந்தவாறு தான் அவை இந்த நாடுகளைக் கட்டுப்படுத்தின. இன்றும் அதே நிலைதான்.
இந்த உடன்படிக்கைக்கான பேச்சுக்கள் இடம்பெற்ற போது அராபியர்களுக்கு எதுவும் தெரியவராமல் பிரிட்டன் அவர்களை இருளில் வைத்திருந்தது. ஆனால் யூதர்கள் இதில் பிரதான பங்காளிகளாகப் பங்கேற்றனர். ரஷ்ய ஊடகங்களில் இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் வெளியான பின்னர்தான் அராபியர்கள் இதுபற்றி அறிந்து கொண்டனர்.
துருக்கிய பேரரசுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் போது அராபியர்கள் சிலரின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக அராபியர்களுக்கு பிரிட்டனின் இராணுவ அதிகாரிவு.நு. லோரன்ஸ் வழங்கிய வாக்குறுதி இதன் மூலம் அப்பட்டமக மீறப்பட்டது. யுத்தம் முடிந்த பின் அராபியர்களுக்கான முழுமையான சுதந்திரம் வழங்கப்படும் என்பதும் அவர்கள் தங்களை தாமே ஆழலாம் என்பதும் தான் அராபியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். அராபியர்கள் பிரிட்டனை நம்பினர் ஆனால் பிரிட்டன் அவர்களுக்கு துரோகம் இழைத்தது.
யுத்த காலத்தில் அதற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் கிச்னர் பிரபு, இந்தியாவுக்கான பிரிட்டிஷ் அரச பிரதிநிதி மற்றும் யுத்த கால அமைச்சரவை அமைச்சர்கள் பலர் அராபியர்களுக்கான சுதந்திரம் பற்றி வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை பிரிட்டனின் தேசிய சுவடிகள் கூட வெளியீடுகளில் காண முடிகின்றது.
பிரிட்டிஷ் பேரரசு எப்போதுமே அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தமது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள அராபியர்களைக் கொண்டு துருக்கிய பேரரசை வீழ்த்தினார்கள்.
அராபியர்களுடன் லோரன்ஸ் பேச்சு நடத்திய எல்லா சந்தர்ப்பங்களிலும் பிரிட்டன் எல்லோருடைய முதுகிலும் குத்திக் கொண்டே இருந்தது. அவர்கள் பிரான்ஸ{டன் பேச்சுவார்த்தை நடத்தி யுத்தத்துக்குப் பின் மத்திய கிழக்கை கூறு போடுவதிலேயே குறியாக இருந்தனர். அரபு பிராந்தியம் ஒன்றிணைந்த அல்லது ஒரு ஐக்கிய ராஜ்ஜியமாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதில் அவர்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர்.
மேற்கு ஐரோப்பிய பாணியில் உருவாக்கப்பட்ட புதிய நாடுகளில் பிரிட்டனும் பிரான்ஸ{ம் மோசடி அரபிக் கும்பல்களை தமது கைக்கூலிகளாக ஆட்சி பீடத்தில் அமரச் செய்தனர். மன்னர்கள் என்றும், இளவரசர்கள்; என்றும் அரச பரம்பரை என்றும் அரச குடும்பம் என்றும் அவர்களுக்கு மகுடங்கள் சூட்டப்பட்டன. அரச குடும்பம் என்ற பெயரில் ஆட்சியாளர்களையும் மக்களையும் பிரிக்கும் இந்த எண்ணக்கரு முற்று முழுக்க இஸ்லாமிய அடிப்படைகளை மீறுகின்ற ஒரு செயலாகும் காரணம் இஸ்லாம் எப்போதுமே சமத்துவத்தை போதிக்கின்ற பேணுகின்ற வலியுறுத்துகின்ற ஒரு மார்க்கமாகும்.
இந்த ஈவு இரக்கமற்ற ஆட்சியாளர்களுக்கு தமது மக்களை வறுமையிலும் அறியாமையிலும் வைத்திருக்குமாறு குறிப்பாக இஸ்லாம் பற்றிய அறியாமையில் வைத்திருக்குமாறு விஷேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு தொழுகைக்கு அனுமதி கொடுங்கள் நோன்பு பிடிக்க அனுமதி கொடுங்கள். ஆனால் இஸ்லாம் ஒரு சக்தியாக எழுச்சி பெற இடமளிக்காதீர்கள். அத்தோடு ஜனநாயகமும் சுதந்திரமும் அவர்களுக்கு இல்லை என்பதை எப்போதும் உறுதி செய்து கொள்ளுங்கள். இவை தான் மேலைத்தேய எஜமானர்களால் அரபு ஆட்சியாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
இவ்வாறுதான் பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சதித்திட்டத்தின் நேரடி வெளிப்பாடுகளாகவே மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இன்றைய அரசியல் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் அமைந்துள்ளன.
மத்திய கிழக்கின் பலஸ்தீன பிராந்தியத்தை கூறு போடும் காரியம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் 1923 க்கும்1948க்கும் இடையில் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பலஸ்தீனர்களை விரட்டி அடித்து பலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து தனியானதோர் யூத அரசை நிறுவ தேவையான மற்றும் சாத்தியமான எல்லா வசதிகளும் சியோனிஸ யூதர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. உதாரணத்துக்கு சாதாரண பேனா கத்தி ஒன்றை வைத்திருந்தமைக்காக பலஸ்தீனர்கள் மின் கம்பங்களில் கட்டப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால் வந்தேறு குடிகளான யூதர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர்.
பலஸ்தீனம் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட முன்னரே 1917ம் ஆண்டில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஆத்தர் பெல்பொர் பிரிட்டனில் வசித்த சியோனிஸ சமூகத் தலைவர் வோல்டர் ரொத்ஸ்சைல்ட்டுக்கு எழுதிய மடலில் “யூத மக்களுக்கு பலஸ்தீனத்தில் ஒரு தேசத்தை உருவாக்குவதை பேரரசியின் அரசாங்கம் மிகவும் சாதகமான ஒரு விடயமாக நோக்குகின்றது. இந்த இலக்கை அடைந்து கொள்ள தங்களால் முடிந்த எல்லா சிறந்த முயற்சிகளையும் பிரிட்டிஷ் பேரரசு மேற்கொள்ளும்….” ஏன்று குறிப்பிட்டுள்ளார்.
1919 பாரிஸ் சர்வதேச சமாதான மாநாட்டில் ஒரு பிரகடனத்தை வரைந்த பெல்பொர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.“நான்கு பாரிய சக்திகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யா) சியோனிஸத்துக்காக உறுதி பூண்டுள்ளன. சியோனிஸம் அது சரியோ பிழையோ, நல்லதோ கெட்டதோ அது நீண்ட கால பண்டைய மரபுகளில் கிளை விட்டுள்ளது. தற்கால தேவைகளிலும் எதிர்கால நம்பிக்கைகளிலும் தற்போது அந்த பண்டைய பூமியில் நிலை கொண்டுள்ள ஏழு லட்சம் அரபிகளின் நலன்களை விட சியோனிஸ நலனே மிகவும் மேன்மை பெறுகி;ன்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
1918 செப்டம்பர் 30ல் டமஸ்கஸில் அரபு கிளர்ச்சியின் ஆதரவாளர்கள் மக்கா நகரில் ஷரீப்பின் ஆட்சிக்கு அதரவாக ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். சமயத் தரைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இதில் இடம் பிடித்திருந்தனர். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களின் மூதாதையரான இப்னு சவூத்திற்கு பிரிட்டன் ஆயுதங்களை வழங்கியது. இதன் மூலம் மக்கா ஷரீப் நீக்கப்பட்டு இப்னு சவூத் குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் புனித நகரங்களான மக்காவும் மதீனாவும் கொண்டு வரப்பட்டன.
துருக்கி பேரரசின் கீழ் ஐக்கியப்பட்ட அரபு உலகம் என்ற ரீதியில் ஒரு சமயத் தலைவரின் கீழ் கிலாபத் ஆட்சி முறையின் கீழ் அரபுலகம் ஒன்றுபட்டிருந்த கடைசி சந்தர்ப்பம் இதுதான்.
பிற்காலத்தில் பிரிட்டனோடும் பிரான்ஸோடும் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. அதன் பின் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அங்கத்துவ நாடுகள் அச்சுறுத்தப்பட்டன. 1948ல் இஸ்ரேல் என்ற பெயரில் சியோனிஸ யூத அரசொன்றை நிறுவுவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மனிதாபிமான ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்டங்கள் என்பனவற்றை எல்லாம் மீறி தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமது கைக் கூலிகளான அரபு உலக சர்வாதிகாரிகளை பதவியில் இருந்து விலக்க பிரிட்டனும் பிரான்ஸ{ம் ஒருபோதும் இணங்கவில்லை. 1956ல் எகிப்தின் பிரபல ஆட்சியாளராக இருந்த ஜனாதிபதி கமால் அப்துல் நாஸர் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்தின் சொத்தான சுயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
பிரிட்டன் பிரான்ஸ் இஸ்ரேல் என்பன இணைந்து எகிப்தின் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வைட் ஈஸன்ஹ{வர் வழங்கிய நெருக்குதல் காரணமாக பின்வாங்கின.
இந்த பின்வாங்களுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் 1967 ஜுனில் நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ரஷ்யா என்பனவற்றின் ஆதரவோடு எகிப்தின் சினாய், காஸா, சிரியாவின் கோலான் குன்று, மேற்கு கரை, ஜோர்தானின் கிழக்கு ஜெரூஸலம் என பல பகுதிகளை தன்னோடு இணைத்துக் கொண்டது. அராபியர்களுக்கு மீள முடியாத ஒரு உளவியல் தாக்கமாக இது அமைந்தது.
காலப் போக்கில் பலஸ்தீன மக்களை கைவிட்டு விட்டு அராபிய சர்வாதிகார ஆட்சியாளர்கள் இஸ்ரேலுடன் இரகசிய உறவுகளைப் பேணவும் வர்த்தக செயற்பாடுகளில் கூட ஈடுபடவும் தொடங்கி உள்ளனர்.  சிலவேளை அவர்களது ஐரோப்பிய எஜமானர்களின் அழுத்தங்கள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். பிற்காலத்தில் இந்தப் பிரந்தியத்தில் இடம்பெற்ற உல்லா யுத்தங்களுக்கும் மோதல்களுக்கும் இஸ்ரேல்தான் காரணமாக அமைந்துள்ளது. காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகளுக்கு கூட சவூதி,ஜேர்ர்தான், இஸ்ரேல்,பலஸ்தீன அதிகார சபை என்பனவற்றின் கூட்டு இரகசிய சதித் திட்டமே காரணமாக அமைந்துள்ளது.
இவற்றின் நடுவே பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன்,பிரான்ஸ் என்பன இணைந்து இஸ்ரேலுடன் கைகோர்த்து இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான யுத்தப் பிரகடனத்தை செய்துள்ளன. ஈராக் லிபியா மற்றும் சிரியா போன்ற ஒரு காலத்தில் அரபு உலகில் செழிப்போடு காணப்பட்ட நாடுகளை இன்று இந்தக் கூட்டு முயற்சி கட்டாந்தரையாக்கியுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த 58மில்லியன் மக்கள் அகதி முகாம்களில் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறுதான் பாரிய இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு இந்தப் பாரிய சக்திகள் நான்கும் பங்களிப்புச் செய்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பூமி சிரியாவின் ஒரு பகுதி, ஈராக், எகிப்து என்பனவற்றின் பகுதிகள் என்பன இணைந்ததுதான் இந்தப் பாரிய இஸ்ரேலுக்கான திட்டமாகும்.
அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் இப்போது கேள்வி.

Post a Comment

0 Comments