Subscribe Us

அபாய எச்சரிக்கை!! மீண்டும் சீரற்ற காலநிலை - இராணுவ படையினர் வெளியேற்றம்..


அரநாயக்க – சாமசர கந்த பகுதியில் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் இன்று காலை ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, சீரற்ற காலநிலை காரணமாக மீட்கும் பணிக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சாமசர கந்த பகுதியில் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களின் 17 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments