பணம் தூய்மையாக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் நடத்தி செல்லப்பட்ட வானொலி தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டும் மே மாதம் 16ஆம் திகதி அதற்கான அனுமதிப்பத்திரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வானொலி சேவை மற்றும் தொலைக்காட்சி சேவை ஒன்றை நடத்தி செல்வதற்காகவே அந்த அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Vis Broadcasting Network Pvt Ltd என்ற பெயரில் கண்ணுக்கு புலப்படாத வானொலி ஒன்றில் பணம் தூய்மையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கிடைத்துள்ள இரண்டு முகவரி தொடர்பில் தற்போது வரையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு விலாசம் இலக்கம் 366P, பயிப் வீதி, கொஸ்வத்தை, பத்தரமுல்ல என்றும், மற்றைய விலாசம், இலக்கம் 17ஏ, ஓஷன்டவர் ஸ்டேஷன் ரோடு, கொழும்பு 00400 என்ற விலாசங்கலாகும்.
Vis Broadcasting Network Pvt Ltd நிறுவனத்தின் பிரதானியாக நாமல் ராஜபக்சவின் உறவினரான ரங்கனி ஹெட்டிஆராச்சி என்பவரே செயற்பட்டுள்ளார்.
நிர்வாக நடவடிக்கைகளுக்காக நிஷாந்த ரணதுங்க தலையிட்டுள்ளதாகவும், மேனக லியனகே, கஸ்ஸப சேனாரத்ன உட்பட சிலர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Vis Broadcasting Network Pvt Ltd நிறுவனம் 2011 ஆம் ஆண்டு சீ.எஸ்.என். தொலைக்காட்சி, சிங்க FM, Red FM ஆகிய வானொலிகள் மற்றும் தொலைக்காட்சி சேவைகளுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாக இது தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Vis Broadcasting Network Pvt Ltd நிறுவனத்திற்கு சொந்தமான வானொலி சேவையில் பணம் தூய்மையாகல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அதன் செயற்பாட்டாளரான கஸ்ஸப சேனாரத்னவிடம் வினவிய போது, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் ஒன்றையும் கூற முடியாதென குறிப்பிட்டுள்ளார்.


0 Comments