கடந்த சில தினங்களாக பெய்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புத்தளம் நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையட்டார்.
கடந்த மூன்று தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தத்தின் போது நகர சபை பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வெள்ளத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டது.
முறைப்பாடுகள் வரும் இடங்களுக்கு உடனுக்குடன் பணியாளர்களை அனுப்பி அவற்றை நிவர்த்தி செய்யும் பணிகள் இடம்பெற்றது.
தொடர்ந்தும் இப்பணிகள் நகர சபை செயலாளரின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்களுடனும் நகர சபை செயலாளர் மேற்கொண்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் நகர சபை ஈடுபட்டு வருகிறது.
அத்தோடு தற்போதைய சீரற்ற நிலைமையில் டெங்கு, வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற பல்வேறு நோய்கள் பரவக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படியும், கொதித்தாறிய நீரை பருகுவதன் மூலமும், வீட்டிலேய சமைத்த உணவுகளை உண்பதன் மூலமும் இவ் அசௌகரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளும்படி பொது மக்களிடம் நகர சபை வேண்டிக்கொள்கின்றது.
மேலும் எவ்வேளையிலும் நகர சபையோடு தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும்படி புத்தளம் நகர சபை செயலாளர் வேண்டிக்கொள்கின்றார்.







0 Comments