Subscribe Us

ஏறாவூர் மருந்து கடையில் போதை மாத்திரைகள்


ஏறாவூர் நகரில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் விற்பனை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் சில மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவினரால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 150 மில்லிகிராம் எடை கொண்ட 18 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்த மாத்திரைகள் நரம்பு மண்டலத்தை தாக்கி நிரந்தரமாக ஊனமுறச் செய்யக் கூடியது என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments