இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்ன தனது 29வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு அவர் உருக்கமான கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி, இன்றைக்கு மட்டுமல்ல, என்னுடைய எல்லா காலகட்டத்திலும் எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் இதயப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார். ரோகித் சர்மா மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Comments