நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்காக ஒரு நாளைக்கு ஒதுக்கப்பட்ட 150 ரூபா தொகையை ரூபா 225 ஆக அதிகரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பணிப்புரையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விசேட அமைச்சரவைப் பத்திரம் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாகவும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.


0 Comments