Subscribe Us

தமிழக தேர்தலுக்குப் பின் மேற்கொண்ட கருத்து கணிப்பின் விபரம்..


தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் தங்களின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் திங்கட்கிழமை நேற்று இடம்பெற்றிருந்தது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் தவிர 232 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுகள் நடைபெற்றன.

தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைமையிலான மக்கள் நலன் கூட்டணி என்பவற்றோடு, பாரதியே ஜனதா கட்சியின் கூட்டணியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

இந்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 19ம் திகதி வெளியாக்கப்படவுள்ளன.

எனினும் தேர்தலுக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதன்படி டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின் படி, அதிமுக – 139 தொகுதிகளிலும் திமுக – 78 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி கருத்துக்கணிப்பின் படி, திமுக – 132 தொகுதிகளிலும் அதிமுக – 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் நேஷன் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் திமுக 114தொடக்கம்118, தொகுதிகளிலும் அதிமுக 95 தொடக்கம் 99 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பிலும், திமுக: 124 தொடக்கம் 140 தொகுதிகளிலும் அதிமுக: 89 - 101, தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments